Thursday, 6 December 2012

ஆண்டியாய்...




சும்மாவா சொன்னார்கள் 
வீட்டை கட்டி பார்
கல்யாணத்தை முடித்து பார் என்று...

முதல் வேலையை கையில் எடுத்து கொண்டு 
அதை கனக்கச்சிதமாக முடித்து,   
தினமும் காலையில் எழுந்ததும் 
இன்று என்ன மெனு என்று
ஹோட்டல் ரேஞ்சில்   
தலையில் ஓடிக்கொண்டிருந்த 
சக்கரத்தை நிறுத்தி,
மனமும்  
மத்தாப்பாய் மழையில் நனைந்து,
மரநிழல் தேடி ஒதுங்கி,
விட்டால்போதும் என்று பட்டம்பூச்சியாய் பறந்து,
கரையை அடைந்த நிறைவில் 
காவி ஆடை போர்த்திக் கொண்டுவிட்டது....

இல்லற துறவறத்திற்கே  
மனம் தன்னை மறந்து ஆடுகிறதே...
உலகத்தையே துறந்த
ஆண்டி கூத்தாட மாட்டானா என்ன...


6 comments:

  1. Replies
    1. எல்லாம் அனுபவம்தான் குணசீலன்....

      Delete
  2. எச் செயலுமே திரும்பத் திரும்ப செய்யும்போது அலுப்பு தட்டத்தான் செய்யும். நம்மை நாமே புத்தாக்கம் rejuvenate செய்யும் ஆட்டம்தான் இது.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் எழில்...ஒரே வழியில் போய்க்கொண்டிருந்தால் வாழ்க்கை வெறும் வேற்று காகிதம் ஆகிவிடும்....

      Delete
  3. thevaiyatra alangaarangal illaamal miga azhagaaga irukkirathu. paaraattukal.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....