Tuesday, 11 December 2012

நடிகை....




சிறு இழை கூட பிசிறில்லாமல்  
புருவங்களை திருத்தி 
கண்களில் காஜலும் 
உதடுகளில் பியர்ல் ஷேடும்
கையில் ஐபோனும்   
இறங்கிய லோ ஹிப்பும் 
ஹை ஹீல்ஸுமாக 
நீ குழந்தைகள் தினம் 
கொண்டாட சென்ற இடம்  
அனாதை இல்லமாக 
அமையாதிருந்திருக்கலாம்...

உன்னால் இன்னும் எத்தனை 
பெண் பிள்ளைகள் பட்டணம் வந்து 
படம் காட்ட போகிறார்களோ 
தெரியவில்லை... 
அந்த இல்லத்தின் 
ரசம் போன கண்ணாடிக்குதான்
தெரியும்....



8 comments:

  1. இன்றைய பெண்களின் நிலைக்கு இப்படி ஒரு கவிதையா...

    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அனாதை ஆசிரமம்ங்களில் fund raising க்காக நடிகைகளை வைத்துதான் ப்ரோக்ராம் நடத்துகிறார்கள்....சங்கடம்தான்... நன்றி நண்பா...

      Delete
  2. பொருள் பொதிந்த அழகான கவிதை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி...

      Delete
  3. Replies
    1. நன்றி முத்தரசு....

      Delete

  4. வணக்கம்

    கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் வன்கவிதை!
    எண்ணத்தில் நிற்கும் இனித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  5. உங்களின் புரிதலுக்கு என் நன்றிகள்...சமுதாயத்தின் சீர்கேடுகளில் இதுவும் ஓன்று...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....