டைரக்டர்....
கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர் பலகை தாங்கி வெளிவந்திருக்கிற படம். இவரைவிட இளையராஜா என்கிற கிராமத்து கலைஞனின் இசைத்தட்டை சுமந்து வந்த படம் என்பதை சொல்வது பொருத்தம்.

படம் பார்த்த பிறகு எனக்கு என்ன தோணுச்சுன்னா இசை வெளியீட்டு விழாவோடே 'இத்துடன் இந்த படம் முடிந்தது' என்று சரோஜ் நாராயணசாமியை வைத்து ஒரு end card போட்டிருக்கலாமோன்னு....
இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய hype யை ஏற்படுத்தி நம்மை இப்படி ஏமாற்றியிருக்க வேண்டாம். எப்போ ஹீரோ ஸ்கூல் படிக்கிறாரு...எப்போ காலேஜ் படிக்கிறாரு...எப்போ IIM ல PG பண்றாரு...ஒண்ணுமே புரியல...
கௌதம் முதல்ல உங்க காலேஜ் லைப்பை பிட் பிட்டா படம் எடுக்கிறதை நிப்பாட்டுங்க. எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. வேற கதை பண்ணுங்க கௌதம்...நீங்க படிச்ச காலத்தை விட்டு வெளியே வந்த பிறகு சொல்லி அனுப்புங்க. நாங்க படம் பார்க்க வரோம்...
ஹீரோ....
ஜீவா ஸ்கூல் படிக்கும் போது பெரிய பாடி பில்டர் மாதிரி உடல், matured முகம், காலேஜ் படிக்கும் போது ஸ்கூல் பையன் மாதிரி முடியை க்ளோஸ் கட்....நல்ல வேளை IIM படிக்கும் போது காட்டலை. ஏன்னா ஹீரோயின் அங்க படிக்க போகாததாலே நாம தப்பிச்சோம்....
இந்த படத்தை ஏனோதானோன்னு பண்ணியிருக்கார் ஜீவா. முகமூடி தோல்வி அடைந்ததாலா என்னமோ தெரியலை....கடைசி சீன்ல மட்டும் கொஞ்சம் சின்சியரா பண்ணியிருக்கார்.
இனிமேல் இந்த ஸ்கூல் பையன் ரோல் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஜீவாவுக்கு. அது எல்லாம் தனுஷ் மாதிரி ஒல்லிகுச்சிகளுக்கு சரிவரும்.
ஹீரோயின்
சமந்தாவை நான் ஈ படத்தில் பார்த்ததில் இருந்து கொஞ்சம் பிடித்திருந்தது. இந்த படத்தில் அதை காப்பாற்றியிருக்கிறார்.
Barbie doll மாதிரி அழகாய் இருக்கிறார். நல்லாத்தான் பேசுகிறார். சோகம் நல்லா வருது. அழுகை எல்லாம் ஓகே. அது என்ன கோபம் வரும்போது மட்டும் வலிப்பு வந்த மாதிரி கை கால் எல்லாம் உதறுது.
ஸ்கூல் பொண்ணா, காலேஜ் பொண்ணா, அப்புறம் வேலை பார்க்கும் போது என்று எல்லா மேக்கப்பும் அழகாய் பொருந்துகிறது சமந்தாவிற்கு.
காமெடி
சந்தானம் இந்த படத்தில் கொஞ்சம் தானே நடித்த மாதிரி தெரிகிறது. கடிக்கிற காமெடியை கொஞ்சம் அளவோடு செய்திருக்கிறார். யார் அந்த குண்டு பெண்....சில இடங்களில் ஓவர் ஆக்டிங். மற்றபடி ஓகே....
இசை
இசைஞானியின் மெட்டு மட்டுமே தாளம் போட வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்பேன்...
சுபம்
போதும் காபி குடிச்சுகிட்டே படிச்சது. எழுந்து வேற வேலை இருந்தா பாருங்க. இதுக்கு மேல எழுத படத்துல ஒன்னும் இல்லை.
இது பொன் வசந்தம் இல்லை....நமக்கு முன்னாடி படம் பார்க்க போனவங்க தொலைச்ச வசந்தம்....

இது பொன் வசந்தம் இல்லை. அப்போ புண்வசந்தம்னு சொல்றீங்க.. அப்போ நான் படம் பார்க்க போகமாட்டேன்.இளையராஜா பாடல்கள் அருமை. அதை டிவியில் பார்த்துக்கலாம்.
ReplyDeleteஅதுவும் சரிதான் விச்சு...
Deleteஒரு டிவிடி கிடைச்சா அனுப்பி வையுங்க...
Deleteநண்பரே பாடல்கள் பற்றி அகிலா சொல்லாதது இது, பாடல் எதுவுமே படத்தில் முழுதாக காட்சிபடுத்த படவில்லை. ஆகையால் இந்த பாடல்கள் வானொலிகளில் மட்டுமே வரும், தொலைகாட்சிகளில் எல்லாம் கிடையவே கிடையாது.......
ReplyDeleteநீங்க சொல்றதும் சரிதான்...
Deleteமிகவும் கஸ்ரப்பட்டு நேரம் போக்கி இருக்கின்றீங்க நீ.எ பொ,வ படம்பார்த்து:))) ராஜா இசை காப்பாற்றி இருக்கு!
ReplyDeleteஅப்போ நான் எழுதினது சரிதானா....எனக்குதான் அந்த பாடம் பிடிக்கலையோன்னு நினைச்சேன்...
Deleteஅடக்கடவுளே... ரஸிச்சுக் கேக்கற மாதிரி இளையராஜா போட்ட பாடல்கள் படத்துல முழுசா வரலையா? ரொம்ப கஷ்டம்தான். சினிமா விமர்சனமும் நல்லாவே எழுதியிருக்கீங்க அகிலா.
ReplyDeleteஇந்த படம் ஆங்கிலப்படம் 500 Days of summer படத்தின் தமிழ் பிரதி. கௌதம் இது வரையில் இப்படி ஆங்கிலத்தில் இருந்து பிரதி எடுத்து கதை திரைக்கதை இயக்கம் என்று எல்லாம் எழுதி பெருமை கொள்கிறார்.
ReplyDeletehttp://panimalar.blogspot.com/2012/12/500-day-of-summer.html
விளக்கமாக எழுதி இருக்கிறேன்.