Saturday, 15 December 2012

இப்போ ஓகே....



இரவின் மிச்சங்களை மறந்துவிட்டு
காலை குளிரில் குளித்து
ஒரு ரோஜாவை கிள்ளி சூடி
சேலைக்கு சரியாய் பொட்டிட்டு
பேருந்தில் உட்காரும் போது
ஞாபகம் வந்தது காதில்
இருப்பதை குளியலில் கழட்டியது

கைப்பையில் துழாவினால்
மாட்டியது நீல கல் வைத்த டிராப்ஸ்
மஞ்சள் கலர் சேலைக்கு
நீல கல் தோடா...
இவ்வளவு காலையில்
பேன்சி ஸ்டோர் திறந்திருக்காதே...
யோசனையாய் கையில்
உருண்டு கொண்டிருந்தது கம்மல்...

சட்டேன்று சேலையை கவனித்தால்
மஞ்சளில் அங்கங்கே நீலமும் சிவப்புமாய் சிறு பூக்கள்
சின்னதாய் ஒரு சந்தோஷம் சிறகடித்தது
இப்போது நீலமும் மஞ்சளும் சமாதானமாய்
என் காலையும் இனிதாய்....




8 comments:

  1. வெளியே செல்லும் பெண்கள் எவ்வளவு விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது !

    எப்படியோ ... இப்போ ஓகே.... ஆகி, உங்கள் காலையும் இனியதாய் ஆனதில் எங்களுக்கும்
    மனது ஓகே ஆனது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...
      நன்றி கோபாலகிருஷ்ணன்....

      Delete
  2. ஐயோ.
    பெண்கள் ரொம்ப நுனுக்கமானவர்கள் ஆடை உடுத்துவதில்...

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிலும்தான்....

      Delete
  3. அவ்வப்போது நீங்களும் ஒரு பெண் என்பதை நிரூபிக்கிறீர்கள் அகிலா!

    ReplyDelete
    Replies
    1. மேம்....பெண்களின் ஒட்டி பிறந்த குணம் எங்கே போகும்?...
      இப்படிதான் அப்பப்போ தலை காமிக்கும்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....