மமதை....
மனிதனின் மமதை...
இருவருமே வலியை விதைத்து கொண்டோம் 
அதை தாங்கும் வலிமையும் கொண்டோம்
சமயங்களில் உடைந்தும் போயிருக்கிறோம்  
மாயக் கண்ணாடித் திரைதான் நடுவில்  
உளி தேவையில்லை உடைக்க...
முதலடி யார் என்பதில்தான் 
மனதின் ஆட்டம் மமதையாய்... 
வாதங்கள்...
கோபமான வாதங்கள் தாக்கும் போது
உடைந்து போகிறோம் 
யோசிக்க முடியாத அளவுக்கு... 
மறுதரப்பு வாதமும் உறைக்கும் பொழுது 
உடைந்து சிதறி போகிறோம்
யோசித்து தெளிந்த அளவுக்கு....



அருமையான கவிதை.
ReplyDeleteகோபம் ஏன்...? வாதம் ஏன்...?
ReplyDeleteமனதின் ஆட்டம் மமதையாய்...
கோபம் வரத்தானே செய்கிறது....அதனால் வாதங்களும் சாத்தியமே....
Deleteமனதின் ஆட்டம் மமதையை -சுடும் உண்மையை சொல்லும் வரிகள்
ReplyDeleteம்ம்ம்....
Delete