Skip to main content

திருமணம் ஒரு வியாபாரம்....




நேற்று ஒரு பெரிய வீட்டு திருமணம்...

மண்டபம் பெருசு...அவங்க மனசும் பெருசு...
பெரிய பெரிய ஸ்டேஜ் decoration லட்ச கணக்கில் பணம் செலவழித்து...

buffet சாப்பாடு ஒரு பக்கம், இலை சாப்பாடு ஒரு பக்கம், அதிலும் சைவம், அசைவம் என தனித்தனியாக....

கார் காராய் ஆசாமிகள், அவர்களின் டிரைவர்களுக்கு என்று தனி சாப்பாடு....

உள்ளுரிலிருக்கும் ஒரு அரசியல்வாதி தன் படை பட்டாளத்துடன்...அவருக்கென்று தனி வீடியோ coverage வேற...நல்ல வேளை பொண்ணு மாப்பிள்ளை காலில் விழாமல் இருந்தார்....



கழுத்திலிருந்து இடுப்பு வரை அடுக்கடுக்காய் நகை அணிந்த பெண்கள்...
இதுக்கேன்றே hairdresser வைத்து ஸ்பெஷல் கொண்டை  எல்லாம் போட்டு மெல்லிசாக ஒரு பட்டு கட்டி, அதில் பாதி உடம்பை காட்டி, யார் திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று வயது வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டு மின்மினிகள்....

எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....

எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்....புரியவில்லை...

என் தோழியின் மகள் திருமணம் என்பதால் நானும் அதில் ஒரு பகுதியாய் நடித்து முடித்து வெளியே வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்....



நம் மனதுக்கு ஒவ்வாத, கொள்கைக்கு மாறுபட்ட சில விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய சந்தர்பங்களை தவிர்க்கலாம் என்று மனதில் தோன்றுகிறது....ஆனால் நடைமுறையில் சாத்தியபடுவதில்லை.....

திருமணங்களை கூட  வியாபாரமாக்கி விற்றுவிடுகிறார்கள். 



ம்ம்ம்....ஒன்றும் சொல்வதற்கு இல்லை....



Comments

  1. //ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கு இல்லை.//

    அதே..........

    ReplyDelete
  2. \\எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்.\\ நீங்க கேட்பது போன்ற திருமனகள் கேரளத்தில் நடக்கின்றன, வீண் செலவு என்று எதுவுமே இருக்காது, ஆனால் இங்கே வறட்டு கவுரவம் பார்க்கிறார்கள், இந்நிலை மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இங்கே யாரும் மாறப் போவதில்லை...

      Delete
  3. வியாபாரம் ஆகி பல காலம் ஆகி விட்டதே...!

    இப்போது மனங்கள் சேருவதில்லை... பணங்கள் தான் சேருகின்றன...

    வாழ்வும் Use and Throw போல் ஆகி விட்டது... கொடுமை...

    சொல்வதற்கு பல உள்ளன...

    ReplyDelete
    Replies
    1. பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற முறையில் தான் மாப்பிள்ளையே தேடுகிறார்கள்....

      Delete
  4. //எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....//

    அவரவர்களுக்கு அது புதிதாக உள்ளதால் இருக்கலாம்.

    அனுபவித்து உணர்ந்தவர்களால் மட்டுமே இதுபோல நினைக்கத்தோன்றுகிறது.

    இன்று புதிதாகத்திருமணம் செய்து கொள்பவ்ர்களும் பிற்காலத்தில் ஏதோ ஒரு நாள் இது போல நினைக்கலாம்.

    ஆனாலும் அதே ஆடம்பரத்துடன் தங்கள் குழந்தைகள் திருமணத்தையும் அவர்கள் நடத்தலாம்.

    //எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்கு இந்த வீண்செலவும் படாடோபமும்....புரியவில்லை...//

    அது தான் புரியாத புதிர். தொடர்ந்து காலம் காலமாக நடந்து கொண்டே தான் வருகிறது. நாளுக்கு நாள் இதில் பல்வேறு புதுமைகளும், பல்வேறு நவீனங்களும் வந்து திருமணச் செலவினை லட்சங்களிலிருந்து கோடிகளாக மாற்றித்தான் வருகிறது.

    சிலர் ஆடம்பரமாக அச்சடிக்கும் பத்திரிகைகளே மிகவும் விசித்திரமாக அழகாக உள்ளன. ஒவ்வொரு அழைப்பிதழும் ரூபாய் 50 முதல் 500 வரை கூட அடக்கம் ஆகிறது. ஆனால் அழைப்பிதழின் நோக்கம் என்ன? எந்த இடத்தில் திருமணம்? எந்த நாளில் திருமணம்? எத்தனை மணிக்குத்திருமணம்? யாருக்கும் யாருக்கும் திருமணம்? என்பது மட்டும் தானே! இதற்கு இவ்வளவு விலையில் அழைப்பிதழ் தேவையா?

    தேவை தானாம். ஏனெனில் அந்த ஜோடிக்கு வாழ்க்கையில் முதன்முதலாக நடக்கும் ஓர் சுபமாக சுகமான புது அனுபவம்.

    நாம் இதைப்பற்றி எடுத்துச்சொன்னால் யாரும் கேட்கப்போவது இல்லை.

    நல்லதொரு ஆதங்கத்தை அழகாக எடூத்துச்சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. அழைப்பிதழ் விஷயத்தில் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு....எதை சொல்லவருகிறோமோ அது மட்டும் போதுமே...அதற்கு ஏன் அவ்வளவு செலுவு செய்து பந்தாவாக அழைப்பிதழ் அடிக்க வேண்டும்....
      நன்றி உங்களின் பகிர்தலுக்கு...

      Delete
  5. திருமண அழைப்பு மற்றும் அழைப்பிதழ் பற்றி நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். சற்றே நகைச்சுவையாகவும் அதே சமயம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.
    நேரமும் விருப்பமும் இருந்தால் படித்து விட்டு கருத்துக்கூறுங்கள்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html [அழைப்பு பகுதி 1 of 2]

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படிக்கிறேன்...

      Delete
  6. நானும் நேற்று இதே போன்ற அசத்தலான திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன்! அசைவம் அங்கு இல்லை..மற்றபடி வாணவேடிக்கை முதற்கொண்டு அனைத்து கொண்ட்டாட்டங்கள்..!

    சேர்த்த செல்வம் பலருக்கு சென்றடையுமே என்று ஆறுதல் அடைந்தேன்...! உழைத்து சேர்த்த பணத்தில் இப்படி செலவு செய்ய மனசு வராது..அதிர்ஷ்டக் காசாகத்தான் இருக்கும் என்றுத் தெளிவடைந்தேன்!
    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படிஎன்றும் இல்லை....அவர்களின் மனம் இந்த ஆடம்பரத்தை தான் விரும்பியிருக்க வேண்டும்....அதனாலும் செலவு செய்கிறார்கள் போலும்...

      Delete
  7. நிதர்சனமான விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிப்ரியன்...

      Delete
  8. சமீபத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த எனது நண்பர் இப்போதுதான்
    ஒரு மூச்சு அழாத குறையாக மனக்குறையை இறக்கி வைத்து விட்டுப்போனார்.
    மணமகனும்,மணமகன் வீட்டாரும் பத்து பைசா வரதட்சணை வேண்டாம் எனச்சொல்லி விட்டார்கள்.
    எல்லா ஆடம்பரச்செலவையும் இழுத்து வைத்தது என் நண்பரின் மனைவி.

    திருமணம் நடக்கும் இடத்தில் ‘இன்கம்டேக்ஸ்காரர்கள்’ இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கு இது ஒரு crazeஆக போய்விட்டது....என்ன செய்ய....
      income tax ஆட்கள் இருந்தால் மட்டும் திருந்தவா போகிறார்கள்....அவர்களுக்கும் சேர்த்து போஜனம் படைப்பார்கள் நம்மவர்கள்....

      Delete
  9. எத்தனை முறை, எத்தனை பேர் சொன்னாலும், இந்த விஷயம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் அகிலா!

    ஆனால் நமக்கு ஒரு சின்ன திருப்தி மனதில் உள்ளதைக் கொட்டி விட்டோம் என்று. அவ்வளவுதான்!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் மேம்...

      Delete
  10. என்ன செய்ய சகோதரி...
    எல்லாம் தலைகீழ் விகிதங்கள் தான்...
    நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோமோ
    அதன் சாயலில் கூட நம்மால்
    வாழ முடிவதில்லை...
    சில நேரங்களில்
    நம்முடன் இருப்போரின்
    மனம் சங்கடப்படும் என்றே
    நிறைய விஷயங்களை
    ஓதுக்கியே வைத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையே மகேந்திரன்...
      சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் மிக்க நம் சமுதாயத்தில் உறவுகளுக்காக சில சமயங்களில் நம் சுயம் சற்று சரிவடைகிறது....

      Delete
  11. கல்யாணத்துக்கு போனமா வந்தமா அப்ப்டின்னு இருக்கணும்...ரொம்ப யோசிச்சா இப்படிதான்....

    ReplyDelete
    Replies
    1. நீங்க அப்படித்தானா ஜீவா?....
      நாமளும் சமுதாயத்திற்காக யோசிக்க வேண்டாமா....

      Delete
  12. //எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்....
    //உண்மைதான் ஆனாலும் ஒரு விளம்பரம் செய்தல் என்பது இயல்பாகிப்போனது இதில் நாமும் விதிவிலக்கல்ல தோழி ஊரோடு ஒத்து வாழ்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....ஏதோ என் ஆதங்கம்ப்பா...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி