Wednesday, 14 November 2012

சின்னதாய்...


தூரமாய்...


உன் பார்வையின் பேச்சு 
என் கண்களில் மீதமாய்... 

உன் வார்த்தைகளின் ஒலி 
என் காதுகளில் மிச்சமாய்...

உன் அருகாமை மட்டும் 
என்னை விட்டு தூரமாய்...



காதலாய்...


முகம் பார்க்கும் கண்ணாடியில் 
என் முகம் பார்த்து நீ...

நிதானமான என் நடையின் பின் 
நாய்குட்டியாய் நீ...

கலகலக்கும் என் பேச்சின் நடுவில்
உம் கொட்டி நீ....

உன் கை நீட்டி 
என் கை கேட்டு 
காதலாய் நீ.....








4 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகளை ரசித்தேன்...

    ReplyDelete
  2. கவிதையின் உயிரோட்டம் அருமையாக உள்ளது

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....