Monday, 8 October 2012

அனாதை என்கிற அடையாளம்

அம்மா தந்தது....



வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்கலில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை
எனக்கு கொடுக்காமல்
உன் பெயரும் சொல்லாமல்
தகப்பன் இவனேன்றும் சுட்டாமல்
தெருவின் விளிம்பில்
பெண் பிள்ளையாயிற்றே என்கிற
சிறு ஆதங்கம் கூட இல்லாமல்
என்னை விட்டுச் சென்றாயே
அனாதை என்கிற அடையாளத்துடன்....

உறங்கினால் எழுப்பவும்
உணவை வாய் நிறைய கொடுக்கவும்
விதம் விதமாய் உடை உடுத்தி 
என்னை அழகு பார்க்கவும் 


என் முகசாயலை 
உறவுகளில் பொருத்திப் பார்க்கவும் 
எனக்கான பொருட்களை
எனக்கேயென்று சேர்த்து வைக்கவும் 
  
உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று  
எனக்கே புரிய வைக்கவும் 
உன்னை தேடுகிறேன் 

என்றாவது 
அனாதை என்கிற சொல்லை  
நீ கடக்க நேரிட்டால் 

என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற 
எதிர்பார்ப்பில்......

12 comments:

  1. சாட்டை வீச்சாய் கவிதை. அருமை

    ReplyDelete
  2. அந்த குழந்தைக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். அவளின் புகைப்படத்தை பார்த்த பின்புதான் இந்த கவிதை எழுதினேன். அவள் கண்களில் இருக்கிற ஏக்கம்.... நன்றி பாலகணேஷ்.....

    ReplyDelete
  3. அன்புள்ள அகிலா,
    உங்களைப் பற்றி இன்றைய வலைச்சரம் இதழில் சொல்லியிருக்கிறேன். வருகை தாருங்கள் ப்ளீஸ்!

    blogintamil.blogspot.com

    ReplyDelete
    Replies


    1. இணைப்பை அனுப்பி இருக்கிறேன்.
      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

      வருகை தருக!

      Delete
    2. பார்த்தேன் மேம்....என் நன்றிகள் உங்களுக்கு...
      எத்தனை அறிமுகங்கள்...
      நிறைய தளங்கள்...
      நிறைய வாசிப்புகள்...
      உங்களின் வட்டத்திற்குள்
      என்னையும் என் அடுப்படியையும்
      என் கவிதைகளையும் இருத்தி
      என்னையும் பெருமைபடுத்திவிட்டீர்கள்....

      Delete
  4. உங்களுடைய சுயநலம் பற்றிய கவிதை தொகுப்பு "அடுத்தவர்களின் வட்டத்துக்குள் " ஒரு கருத்தை ஆழமாக சொன்னது போல ...
    இந்த சமுக அவலத்தை நாங்கள் எல்லோரும் தான் பார்க்கிறோம் ..ஆனால் எங்கள் சுயநலனில் மாத்திரம் அக்கறை கொண்டு ..இந்த பொதுநலத்தை ...
    முக்கியத்துவம் கொடுக்காமல் ..மனது இல்லா மாந்தர்களாய் கண்டும் காணமல் போய் விடுகிறோம் ..
    ஆனால் நீங்கள் அந்த சமுக அவலத்தை சாட்டை(கவிதை ) கொண்டு அடித்து இருக்கிறீர்கள் ...
    இது போல் நிறைய விஷயங்கள் ..பகிர்ந்து கொள்ளுங்கள் ..சமுதாய விழிபுணர்வுக்கு வழிகோலுங்கள் ...
    நன்றி..நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் ....
    அதை விட அந்த சின்ன பெண்ணின் கண்களில் தெரிகிற வேதனைகளை பாருங்கள் ...கடவுள் இருந்தால் அவனே தாயும் தந்தையுமானவனாக இருந்து எல்ல ஆசைகளையும் நிரைவேற்றி..கொடுக்க வேண்டும் ..அதன் முதல் படி தான் உங்களை போன்றவர்களின் ....ஆதரவுகள் ...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வேண்டுதல் அந்த குழந்தைக்கு போய் சேரும் என்கிற நம்பிக்கையில் உங்களின் வருகைக்கு நன்றி ராஜன்...

      Delete
  5. வரிகள் நெகிழ வைத்தது...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… திரு. ரஞ்ஜனி நாராயணன் அம்மா அவர்களின் அறிமுகம்... Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்....

      Delete
  6. அனாதை என்கிற அடையாளம்
    அம்மா தந்தது....

    அம்மா என்றால் இந்த அடையாளம் தந்திருக்ககூடாது...

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும் போது அம்மா என்கிற வார்த்தை பொய்யாய் போய்விடுகிறது....

      Delete
  7. மிகவும் அருமையாக உள்ளது..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....