Saturday, 20 October 2012

தூறல்கள்.....

நினைப்பு :

உன் நினைப்பு சுமக்கும் இதயம்
வலிக்கிறதே சுமக்க முடியாமல்...
சற்று இறக்கி வைக்கலாம்தான்...
மீண்டும் சுமக்க தொடங்கினால்
இன்னும் புதிதாய் பெரிதாய் வலிக்குமே...

இறக்கிய இடத்திலேயே
விட்டு செல்லலாம் என்றால்
சற்று தொலைவு செல்வதற்குள்
எங்கு தொலைத்தாலும் சரியாய்
வீட்டு வாசலில் நிற்கும் பூனையாய்
வந்து ஓட்டிக் கொள்கிறதே....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

பார்வை....


பாதம் மட்டுமே பதித்து 
பார்வை பதிக்காமல் போயிருப்பாயோ 
என்கிற பரிதவிப்பில் 
என் பார்வை உன் மீதில்லை....

என் பரிதவிப்பு உண்மையென்றால்
உன் பார்வை என் மீதில்லை 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

நிஜம்...

தாமரை இலையின் மீதிருந்து 
விலகி ஓடும் நீரை போல் 
நினைவுகளிலிருந்து 
நிஜம் பிரித்து ஓடுகிறேன் 
ஆயினும் 
நிஜம் இன்னும் நரம்புகளில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

10 comments:

  1. நல்ல கவிதைகள்...

    முடிவில் உள்ளது மிகவும் அருமை...

    ReplyDelete
  2. நிஜங்கள் தடம் மாறினாலும்
    நினைவுகள் தடம் மாறாது....

    மேகத்தின் தூறல்கள்
    மண்ணிற்கு மாற்றம்
    கவிதைகளின் தூறல்கள்
    நினைவுகளின் ஓட்டம்
    வரிகள் அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. இயற்கை அழகில் அலங்காரங்கள்
    அர்த்தம்ற்றுப் போவதைப்போல்
    கவிதைகளில் பீறிடும் உணர்வுப் பெருக்கத்தில்
    வார்த்தைகள் வெறும் குறிகாட்டிகளாகித் தான் போகின்றன
    கவிதைப் பெண் விரும்பி தங்கள் வசப்பட்டிருக்கிறாள்
    தொடர்ந்து ஜமாயுங்கள்

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையை அலங்கரித்த உங்களின் பாராட்டுக்கு நன்றி ரமணி அவர்களே....

      Delete

  4. வணக்கம்!


    பார்வை பார்த்த நொடி்பொழுது
    பகலும் இரவும் நீண்டுவரும்!
    போர்வை போர்த்தி அடைத்தாலும்
    பொல்லா நினைவு பொலிந்துவரும்!
    கோர்வை யாகத் தொடா்ந்துவரும்!
    கொட்டும் மழைபோல் குளிர்ச்சிதரும்!
    வோ்வை முத்து விளைக்கின்ற
    சோர்வை போக்கும்! சுவைகொடுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. படிக்க படிக்க சுவைக்கும்
      உங்கள் கவிதையை போலே...

      Delete
  5. கவிதைகள் அருமை!.

    ///நினைவுகளிலிருந்து
    நிஜம் பிரித்து ஓடுகிறேன்
    ஆயினும்
    நிஜம் இன்னும் நரம்புகளில்///
    மிகவும் நல்ல கருத்து

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....