Tuesday, 25 September 2012

பெயர் தெரியாமல்...

உறவுகள்...


எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடமாக ரொம்ப பழக்கமான ஒரு குடும்பம். தன் பேரனுக்காக ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க அந்த பாட்டி. அப்படியே எங்க கூட பழக்கமாகிட்டாங்க. அவங்க வீட்டுல என்ன நடந்தாலும் நாங்க இல்லாம இல்ல. அதே மாதிரிதான் இங்கேயும். 

அம்மா என்கிற வார்த்தையை தவிர நானும் என் கணவரும் வேறு வார்த்தை சொல்லி அவங்களை கூப்பிட்டதில்லை. எத்தனையோ குடும்ப விசேஷங்களுக்கு பத்திரிகைகள் பரிமாறிக் கொண்டதுண்டு. ஆனால் அவங்க பெயரை தெரிந்து கொள்ளவும் இல்லை. அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. நேற்று அவங்க பேரனின் திருமண பத்திரிகை வைத்தார்கள். 

அப்போதுதான் பார்த்தேன் அவனின் இரண்டு பாட்டிகளின் பெயரும் இருந்தது. இதில் எது இவர்களின் பெயர் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். பாப்பநாயக்கன்பாளையம் என்ற ஊரின் பெயரை வைத்து அம்மாவின் பெயர் காந்தாமணி என்றும், ஐயனின் பெயர் சுப்பையன் என்றும் கண்டுபிடித்தேன். அவங்க பெயரை எதற்கு எழுதுகிறேன் என்றால், இப்படி எழுதினாலாவது நம்ம மூளைக்குள்ளே ஏறும்னுதான். 

அவனின் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அவர்களின் குழந்தைகள் என்று அணைத்து உறவுகளின் பெயர்களும் தெரிந்திருக்கும் போது அந்த அம்மாவின் பெயரும் ஐயனின் பெயரும் மட்டும் தெரியாமல் இருந்திருக்கிறேன். இதற்கு முன்பு அவர்கள் வீட்டு விசேஷங்களில் வைத்த பத்திரிகையில் வந்திருந்திருக்கும். ஆனால் அவர்களின் பெயர்களை கவனிக்காமல் விட்டிருப்பேன், இல்லையென்றால் கவனித்து, பின்பு மறந்து போயிருப்பேன்.

ஒரு முறை யாரோ என் பாட்டியின் பெயரை கேட்க அதையே யோசித்துதான் சொன்னேன். என் சித்தப்பா பெயரை ஒரு முறை மறந்திருக்கிறேன். நல்ல வேளை அம்மா, அப்பா பெயரையாவது மறக்காம இருக்கிறேனே, அதுக்கு சந்தோஷபட்டுக்கணும். மற்றவர்களை எல்லாம் பெயர் சொல்லி கூப்பிடுகிறோம். பெரியவங்களை மட்டும் உறவின் பெயரால்தானே அழைக்கிறோம். இதுதான் நெருங்கியவர்களின் பெயர்கள் தெரியாமல் போவதின் காரணம்.


நாமே இப்படி இருந்தா நம்ம பிள்ளைங்க எப்படி இருப்பாங்க. இனிமேல் பிள்ளைகளுக்கு உறவுகளைக் கூப்பிடச் சொல்லிக் கொடுக்கும் போது, மறக்காம அவங்க பெயரையும் சேர்த்து சொல்லி கொடுக்கணும்னு நினைச்சுகிட்டேன்.

நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. எத்தனை தெரிந்தவர்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதென்று......


       

26 comments:

  1. எனக்கு முதலிலிருந்தே எல்லோரையும் பேரை சொல்லி (மரியாதையாக ) கூப்பிட்டு பழக்கம்... ஆனால் நீங்கள் சொல்வது மிக சரியே.....

    ReplyDelete
  2. ஆஹா...இப்படிதான் மரியாதையா இருக்கணும் உஷா....

    ReplyDelete
  3. யார் வீட்டுக்கு வந்தாலும் அவங்க பெயர் என்ன என்று கேட்க்கும் என் மகனை விரட்டகூடாது என்று சொல்றீங்க! ம்ம்ம் எங்களுக்கு என்னவோ அது மரியாதை குறைவா கேட்பதுபோல் தோன்றுகிறது.
    http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html

    VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?

    ReplyDelete
  4. கண்டிப்பாக சொல்லிகொடுங்கள் உங்களின் மகனுக்கு. நன்றி ஆகாஷ்....

    உங்க வீடியோ கிளிப் பார்த்தேன். நன்றி...

    ReplyDelete
  5. இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்...?

    ReplyDelete
  6. அதுவும் சரிதான் தனபாலன்...ரொம்பபபப அறிவானவங்க....
    நன்றி தனபாலன்...

    ReplyDelete
  7. அவர்களிபற்றி இன்றும் இப்படி நினைவுக்கு அவர்கள் உங்களின்மேல் வாய்த்த அன்பு தான் காரணம் அந்நியர்க இருந்ஹ்டாலும் பேர் தெரியாவிட்டாலும் அந்த பாட்டி எனும்போது அவர்களை மறக்காமல் நினைப்பது சந்தோஷம்

    ReplyDelete
  8. இன்றைக்ும
    என்
    குழந்தைகள்
    பாட்டியை
    பாட்டியின்
    அம்மாவையும்
    பெயருடன்
    சேர்ந்தே
    பாட்டி
    என்றே
    அழைக்கிறார்கள்
    உங்கள்
    கருத்து
    சரியே

    ReplyDelete
  9. அவர்கள் மேல் இருந்த அன்புதான் அவர்களின் பெயரை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணவில்லை...நன்றி கண்ணதாசன்....

    ReplyDelete
  10. அதுதான் சரி....இல்லையேன்றால் பெயர் தெரியாமலே போய்விடும்....
    நன்றி மனசாட்சி....

    ReplyDelete
  11. akila solvathu unmaiye... sarithane... tholi akilaa avarkalee.. naan ipppa peyar solla palaki vitten..

    ReplyDelete
  12. நீங்க சொல்றது சரிதான்...இருந்தாலும் நாம நம்ம தாத்தா பாட்டி பேரெல்லாம் தெரியாம இருக்ககூடாதுல்ல... எனக்கெல்லாம் நாலு தலைமுறை வரை எங்க தாத்தாக்கள் பேறு தெரியுமாகும்! STD-ஐ கரைச்சு குடிச்சவைய்ங்கன்னா சும்மாவா? :D :D

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி
    அதைப்போலவே செல் வந்தபின்பு
    யாருடைய வீட்டு விலாசங்களும்
    இப்போது யாரிடமும் இல்லை
    ஒரு முக்கியமான குடும்ப நிகழ்வுக்கு
    பத்திரிக்கைகொடுக்க முயலுகையில்தான்
    பெயர் அறியாததும் விலாசம் அறியாமல் இருப்பதும்
    எத்தனை பெரிய தவறு எனப் புரிகிறது
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவுக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. எங்கள் வீட்டில் நிறைய சித்திகள் எனக்கு இருந்ததால் அந்த சித்தியின் பெயர்களோடு சித்தி எனக் கூப்பிட்டு பழகியதால் என் மகனுக்கும் அதே வழியில் பாட்டி,தாத்தாக்கள் மற்ற உறவுகளும் பழகி விட்டது. என்ன கொஞ்சம் பெரியவர்கள் எதிரில் நாம் அப்படி கூப்பைடுவது தெரிந்து சங்கடப்படுகிறார்கள் முக்கியமாக தாத்தாக்கள்

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லவது மிகச் சரியே.....எனது பெரியப்பாக்களின் உண்மையான பெயர் என்பது என்ன வென்றே இதுவரை எனக்கு தெரியவில்லை அவர்களை நிக் நேம் சொல்லி அதனுடன் பெரியப்பா என்று கூப்பிட்டே பழகிவிட்டதால் இப்போது யோசித்தால் கூட பெயர் ஞாபகம் வரவில்லை

    ReplyDelete
  16. சரவணன், பெரியவங்களை பெயரை மட்டும் வச்சி கூப்பிட்டு அடி வாங்குனா நான் பொறுப்பில்லை.....

    ReplyDelete
  17. ஹலோ வரலாற்று சுவடுகள்....
    எங்களுக்கும் தெரியும் அவங்க பெயர். ஆனால் பாட்டின்னு மட்டும் கூப்பிட்டுகிட்டே இருக்கிறதாலே திடீரனு பெயர் மறந்து போகும்...அவ்வளவுதான்....

    சமாளிசாச்சு....

    ReplyDelete
  18. உண்மைதான் ரமணி அவர்களே...
    பெயர், விலாசம், அவர்களின் போன் நம்பர் எதுவுமே தலைக்குள் இருப்பதில்லை...நன்றி...

    ReplyDelete
  19. ஆமாம் எழில் அது கொஞ்சம் சங்கடம்தான்....நன்றி....

    ReplyDelete
  20. மதுரை தமிழன்....
    சரியாய் சொன்னீர்கள். இப்படி நிறைய காமெடி நடக்கத்தான் செய்கிறது நம் வாழ்க்கையில்...நன்றி...

    ReplyDelete
  21. நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. எத்தனை தெரிந்தவர்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதென்று......//மிக உண்மை அகிலா.இங்கு நிறைய பேர்கள் அவரகள்து பிள்ளைகளின் பெயரை வைத்துத்தான் அவரகளின் அம்மா என்று அழைக்கின்றனர்.ஆகையினால்த்தான் குறிப்பிட்டவர்களின் பெயரே அடிபட்டு போய் விடுகிறது.

    ReplyDelete
  22. நிஜம்தான் ஸாதிகா.....

    ReplyDelete
  23. என்னைப் பொருத்தவரை இந்த பிரச்சினை எனக்கில்லை. ஏனெனில்
    புதியவர்கள் யாரைப் பார்த்தாலும், முதலில் அவர்கள் பெயரைக் கேட்பேன். பெயரைச் சொல்லித்தான் அழைப்பேன். நம் அடையாளமே பெயர்தானே. அதைச் சொல்லி அழைப்பதில் என்ன தப்பு?

    என் கணவருக்கு யாருடைய பெயரும் நினைவில் இருக்காது. அவருக்கும் சேர்த்து பெயர்களை நினைவு வைத்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு!

    இன்னொன்று: என்னை திருமதி நாராயணன் என்று யாராவது அழைத்தால், தயவு செய்து ரஞ்ஜனி என்று கூப்பிடுங்கள் என்றும் சொல்லிவிடுவேன்.

    எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறதே, ஏன் வேறு அடையாளம் வேண்டும் என்றும் தோன்றும்.

    ReplyDelete
  24. ரஞ்சனி மேம்....
    உங்க சிந்தனையும் என்னோட சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கிறது. அதிசயம்....
    நன்றி ....

    ReplyDelete
  25. மிகவும் சரியான, அருமையான, பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் எழுதியுள்ளதையும் ரஸித்தேன். அவர் சொல்வதும் சரியே.

    ReplyDelete
  26. உங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....