Wednesday, 26 September 2012

ஏவாள்....




பூப்போட்ட பாவாடையில்
பூப்பெய்தி தாவணியில்
சுதந்திரமாய் நான்...

உன் மணவறையில்
உன் மேலுள்ள கிறக்கத்தில்
சங்கீதமாய் நான்...

சம்சாரத்தின் பிடியில்  
சலிப்பாய் வாழ்ந்து
சங்கீதம் செத்து
இப்போது கூண்டுக்குள்
மொழியில்லாமல்
வார்த்தையில்லாமல்
குரல் தொலைத்து
ஏவாளாய் நான்...



8 comments:

  1. எல்லா பெண்களின் நிலையும் இது தானே சகோ.

    ReplyDelete
  2. நிஜம்தான் சசிகலா...

    ReplyDelete
  3. திருமணத்திற்குப் பின் சுயம் இழக்க நேரும்
    பெரும்பாலான பெண்கள் மன நிலையை
    வெகு நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஓன்று அவர்களாகவே தொலைக்கிறார்கள், இல்லை தொலைக்க வைக்கப்படுகிறார்கள்...
    நன்றி ரமணி அவர்களே....

    ReplyDelete
  5. உண்மையின் எதார்த்தம் உங்கள் வரிகளில் தெரிகிறது இப்போதுள்ள சிலரின் காலச் சூழ்நிலையும் அதுதான்

    ReplyDelete
    Replies
    1. கூண்டுக்கிளி பெண்கள்....நன்றி...

      Delete
  6. கூண்டுக்கிளி என்று நினைத்துவிட்டேன். சொன்னவிதம் அருமை, ஆனால் உங்க எழுத்துகளின் நிறம்தான் படிக்கமுடியவில்லை, முகம் சுழிக்க வைக்கிறது.

    எழுத்து வண்ணம் மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. dark background க்காக போட்டேன்...மாற்றிவிட்டேன்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....