Sunday, 19 August 2012

பயணிக்க தயாராகிறது...

படகு....



பயணத்தின் தூரம் அதன் சுமை எதுவும் தெரியாது... 
பயணம் நீரின் மேலா உள்ளா என்பதும் தெரியாது....

சந்தோஷமான முகங்களை ஏற்றிச் சென்று
அப்படியே கரை  சேர்ப்போமா சவமாய் சேர்ப்போமா
அதுவும் தெரியாது....

கடலின் ஆழம் அதன் விலங்குகள்
மோதும் பாறைகள் வீசும் புயல்கள்
எல்லாம் பயமில்லாமல் தாண்டலாம்....

சுடும் மனிதர்களை மட்டும் பயமில்லாமல் 
தாண்ட முடியுமா என்பதும் தெரியாது....

ஈரமான பயணம் தான் ஒவ்வொரு முறையும் 
உப்பு நீரா சிவப்பு நீரா என்பது மட்டும் தெரியாது....

பயணிக்க தயாராகிறது படகு.....


6 comments:

  1. கவிதையின் மறை பொருளும்
    அதிகமான வற்றுடன் இணைத்துப்பார்க்கும்படியான
    கழுகுப்பார்வை சிந்தனையும் பிரமிக்கவைக்கிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. என் நன்றிகள் உங்களுக்கு....

      Delete
  2. நல்ல வரிகள்..!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...

      Delete
  3. ''..உப்பு நீரா சிவப்பு நீரா என்பது மட்டும் தெரியாது....''
    பல கதைகள் கூறும் வரிகள் .
    நல்வாழ்த்து.

    ReplyDelete
    Replies
    1. அந்த வரியை மட்டும் உணரத்தானே முடியும்....
      நன்றி....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....