Thursday, 16 August 2012

உன்னுள் பூக்கள்....




அலை பாயும் கண்கள்
சாதாரணமாய் அடங்குவதில்லை....

பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்
சட்டென்று ஊமையாவதில்லை....

தேடிக்கொண்டிருக்கும் மனங்கள்
தேடலை நிறுத்துவதில்லை...

தொடரும் தேடல்கள் நம்மை
தொலைக்காமல்  விடுவதில்லை...

அடக்கம் இல்லா வாழ்க்கை
அமைதியை தருவதில்லை.....

துரத்தும் மனசாட்சிகள் நம்மை
கொல்லாமல் விடுவதில்லை...

உண்மையில்லாத பொய்கள்
உறங்கவிடுவதில்லை...

கண்ணீரால் நம் பாவங்கள்
கழுவப் படுவதுமில்லை....

நிமிர்ந்து நேர்மையாய் இருப்பதால்
புன்னகை பூக்கள்
பூக்காமலும் போவதில்லை....




8 comments:

  1. நிமிர்ந்து நேர்மையாய் இருப்பதால்
    புன்னகை பூக்கள்
    பூக்காமலும் போவதில்லை.

    புன்னகை பூக்கவைக்கும் அழகிய பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ராஜேஸ்வரி....

      Delete
  2. //
    துரத்தும் மனசாட்சிகள் நம்மை
    கொல்லாமல் விடுவதில்லை..
    //

    நல்ல வரிகள்!

    ReplyDelete
  3. அனைத்து வரிகளும் மிக நன்றாக இருக்கிறது.பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. நிமிர்ந்து நேர்மையாய் இருப்பதால்
    புன்னகை பூக்கள்
    பூக்காமலும் போவதில்லை....
    அழகிய வரிகள் சொந்தமே!அருமை!அருமை!
    வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!!!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
    Replies
    1. என் நன்றிகள்....சந்திப்போம் சென்னையில்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....