என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலான போது, அங்கே குடித்தனத்திற்கு தேவையான சில பொருட்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போனது. அதில் ஒன்றுதான் எங்கள் பிரிட்ஜ். எப்போவாவது இங்கு வரும்போது தானே தேவைப்படும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்துட்டேன். அது எனக்கு ஒரு அவசியமான விஷயமாக தோணவில்லை. இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் வந்தபோது தான் இந்த பிரிட்ஜை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம்னு தெரிஞ்சுது.
ஏறக்குறைய நம் பாட்டி வாழ்ந்த பழைய காலத்திற்கே திரும்பி போய்விட்டேன். எவ்வளவுதான் நம்ம கணவர், குழந்தைகள், எல்லோரும் 'தினசரி இட்லி, இல்லைன்னா தோசை' ன்னு முணுமுணுத்தாலும் அதை காதில் வாங்காமல் ஞாயிற்றுகிழமை தோசைக்கு அரைத்து திங்கள் கிழமை தோசை மாவை பிரிட்ஜ்க்குள் திணிக்கும் நம் பழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. நானும் மாவை வைக்க பிரிட்ஜை தேடினால் அது இல்லை. அப்புறம் மேலே loft இல் இருந்த எங்க அம்மாவோட பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவை உள்ளே வைத்து அந்த தண்ணியை தினமும் மாற்றி... போதும்....போதும்....
தயிருக்கும் இதே கதைதான்...ஆனாலும் புளித்துவிடும். குழந்தைகளுக்காக காலையில் உரை ஊற்றுவார்களே அந்த மாதிரி செய்து கொண்டிருந்தேன்.
மாவு ஓகே....தயிர் ஓகே....காய்கறி?...
உருளை கிழங்கு, வெங்காயம் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து ஏற்கனவே தப்பித்தது.
கத்திரிகாய்....பிரிட்ஜுக்குள் வைத்தால் அதிலிருக்கும் சிறு புழுக்கள் இருப்பது தெரியாமல் போய்விடும், வைக்க கூடாதுன்னு எங்க அத்தை சொல்லுவாங்க....அப்ப ஓகே...கத்திரிக்காயும் தப்பித்தது.
வாழைக்காய்....என் மச்சாண்டார் வீட்டில் வாழைக்காயை உள்ளே வைப்பதை பார்த்து நானும் அப்படியே செய்து வந்தேன். இப்போ அதுவும் வெளியே....காலையில் எழுந்து பார்த்தால் அது வாழைப்பழம் ஆகியிருக்கும்.....Good....
அடுத்தது தக்காளி.....தக்காளி செடி போட்டிருந்தேன். தக்காளியாக காய்த்து கொட்டியது. வீட்டுக்கு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோருக்கும் தினமும் தக்காளி திருவிழாதான்.....ஒரு கட்டத்தில் முடியாமல், எல்லா தக்காளி செடியும் cut...
தேங்காய் உடைத்தால், ஒரு பாதி உபயோகித்துவிட்டு மறு பாதி தண்ணீர் பாத்திரத்திற்குள்.....தேங்காய்க்கு எதுக்கு தண்ணீர் என்கிறீர்களா....எறும்புக்கு பயந்துதான்.....பிரிட்ஜ் என்பது எறும்பிடம் இருந்தும் நம் பொருட்களை பாதுகாக்கும் என்ற அரிய உண்மையை அப்போதான் கண்டுபிடிச்சேன்.
நல்லவேளை கருவேப்பிலையும் பச்சை மிளகாயும் செடியிலேயே இருந்ததால் அதற்கு பிரிட்ஜ் தேவைப்படவில்லை....
அப்புறம் soft drinks, squash, soya sauce, mayonnaise sauce, green chilli sauce, butter slices...எல்லாம் கட்....tomato ketchup, tamarind paste, ginger garlic paste எல்லாம் sachet தான்....
ஸ்வீட்ஸ் நிறைய இருந்தால் எல்லாம் பிரிட்ஜ் உள்ளே
போகும். இப்போ டைனிங் டேபிளின் மேல். வீணா போகுதேன்னு சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டதுதான் மிச்சம்.
அப்புறம் குழம்பு, கறி பழசு எல்லாம் எங்கே என்கிறீர்கள்....ஒரு குட்டி மண் சட்டி வாங்கி வந்து ஒரே சுண்டக்கறிதான். அது ஒரு தனி சுவைதான். எங்க பாட்டி ஞாபகம் வந்தது. நான் சாப்பிட்டேன். ஆனால் எங்க வீட்டு ரெகுலர் விசிட்டர் மிஸ்டர் காக்கா சாப்பிட மறுத்திட்டார்.
நான் எப்போ கோயம்புத்தூர் வருவேன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க போல, ஒரே guests...சும்மா வாக்கிங் போற பிரண்ட்ஸ் கூட வீட்டுக்குள் வந்து செல்வார்கள். அடிக்கடி பால் பாக்கெட் கொண்டு வரச்சொல்லி பக்கத்து கடைகாரப்பையன் என்னை பார்த்தாலே ஓடிவிடுகிறான். பிரிட்ஜ் இல்லாமல் இருக்கவே முடியாதா என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஏற்கனவே உள்ளதும் பழசாகி சரியாக வேலை செய்யாததால் புதுசு ஓன்று வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்து வாங்கியும் விட்டேன்.
ஒரு வாரம் முன்புதான் புது பிரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. இப்போ உலகத்தில் இருப்பது எல்லாம் அதற்குள்தான். எல்லாவற்றையும் அதற்குள் அடைத்த பிறகுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
இப்போது உட்கார்ந்து யோசித்து பார்த்தால், சே என்ன வாழ்க்கை இது... ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே நான் புத்தரின் தீவிர fan.
ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்; ஆசையை அறவே ஒழி
என்று சொல்லி சென்றான் என் புத்தன்....
ஆனால் இன்று அழியக்கூடிய பொருட்களின் மேல் ஆசை வந்ததை நினைத்து என் மேலேயே எனக்கு கோபம்தான் வந்தது. யோசித்தால், புத்தரிடமே ஒரு குறை இருக்கிறது. வாழ்க்கையில் எங்கிருந்தோ திடீரென்று
வரும் ஞானோதயங்கள் எல்லாம், எல்லாவற்றையும் அடைந்த பிறகுதானே வருகிறது....புத்தருக்கும் அப்படிதானே. அரசனாய் அணைத்தையும் அனுபவித்த பிறகுதானே 'ஆசையை ஒழி' என்றார்.
நம் மனது கூட எவ்வளவு சுயநலமாக, நமக்கு சாதகமாகவே யோசிக்கிறது. புத்தரையே விமரிசனம் செய்யும் அளவுக்கு போய்விடுகிறோம். தவறு....கருத்து சொல்கிறவரின் நிறை, குறைகளை ஆராய்வதை விடுத்து அவர் சொன்ன கருத்துகளை மட்டும் உட்வாங்குவோம். அதுதான் சிறந்த குணமும் கூட....இப்படி நான் சொன்ன கருத்தையும் கொஞ்சம் யோசிங்க....
நிதர்சனமான பகிர்வுகள்..
ReplyDeleteநன்றி ராஜேஸ்வரி....
Delete///கருத்து சொல்கிறவரின் நிறை, குறைகளை ஆராய்வதை விடுத்து அவர் சொன்ன கருத்துகளை மட்டும் உட்வாங்குவோம். அதுதான் சிறந்த குணம்///
ReplyDeleteஅருமையான சிந்தனை ..!
நன்றி......
Deleteநிஜம்தாங்க.. ஃப்ரிட்ஜ் என்பது அத்தனை அத்தியாவசியமாகிவிட்டது இன்று. அன்று பெரிய்ய குடும்பங்கள் இருந்ததால் மீதம் வருவது குறைவு. இப்போ அப்படியில்லை.
ReplyDeleteஉண்மை.....காலையில் வைக்கும் சட்னியில் இருந்து, இரவு சமைக்கும் உருளைக்கிழங்கு குருமா வரைக்கும் அதுக்குள்ளே தானே அடைபடுகிறது......
Deleteஉண்மையான உண்மை சகோதரி...
ReplyDeleteநன்றி மகேந்திரன்.....
Deleteப்ரிட்ஜின் அவசியம் இப்போது ரொம்பவே அதிகரித்துவிட்டது. நீங்கள் சொன்னதுபோல் உலகத்தில் உள்ள அத்தனையும் இப்போது ப்ரிட்ஜுக்குள்.ஹ ஹ ஹ.. ரசித்து எழுதியுள்ளீர்கள். குட்டி குட்டி புத்தர் அழகு. நீங்கள் புத்தரின் விசிறியா!!!
ReplyDeleteபுத்தரின் பரம விசிறி......
Deleteஉங்களின் வருகைக்கு நன்றி....
ReplyDeleteசிந்தனைச் சரடைச் சுண்டிப்பிடிக்காமல்
ReplyDeleteஅதன் போக்கில் போகவிட்டால்
நிச்சயம் சொல்லிச் செல்லும் விதமும்
அதன் போக்கும் மிக மிக நேர்த்தியாக அமையும்
என்பதற்கு இந்தப் பதிவே சிறந்த உதாரணம்
பிரிட்ஜில் துவங்கி புத்தனில் முடித்தது
ரசிக்கும் படியாக இருந்தது
புத்தன் ஆசையைத்தானே சொன்னார்
தேவையைச் சொல்லவில்லையே
மனம் கவர்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்
(சென்ற பதிவுக்கான என் பின்னூட்டம்
ஸ்பேம் சிறையில் கிடக்கிறது என நினைக்கிறேன் )
நன்றி ரமணி அவர்களே....தேவையை அடையவும் ஆசை வைக்கவேண்டி இருக்கே....
Deleteசென்ற பதிவை நான் என்னுடைய இன்னொரு வலையிலும் (wordpress) பதித்திருந்தேன். நீங்கள் அதில்தான் பின்னோட்டம் எழுதியிருக்கிறீர்கள்....நன்றி உங்களுக்கு....
http://nilathuli.wordpress.com/2012/05/26/நம்ம-ஊர்-பெண்கள்/
உண்மைதான் சகோதரி எவ்வளவு அழகாய் விளக்கம் சொல்லி ஆனாலும் மறுபடி புது பிரிட்ஜ் வாகினதா சொன்னது கொஞ்சம் சித்திக்க வைத்தது ஒன்று பழகிவிட்டால் மாற முடியல என்ன பண்றது .
ReplyDeleteஎன் கணவரின் வேலை (Dy. Commr. of Police) நிமித்தமாக ஊர் ஊராக பொருட்களை தூக்கி செல்வது சற்று கடினம்தான். பெரும்பாலும் சில ஊர்களில் அங்கு உபயோகிக்க வாங்கும் சமையல் பாத்திரங்கள், மற்ற சில பொருட்களை அங்கேயே ஏதாவது orphanage பார்த்து கொடுத்துவிட்டு வருவது பழகிவிட்டது....என்ன செய்வது.....
Deleteஆ.... போலீஸ் DC மனைவியா நீங்க? முதல்லயே சொல்லக்கூடாதா? அவ்வ்வ்வ்..... இனி கவனமா கமெண்ட் போடணும்...
ReplyDelete(ஹா.. ஹா.. ச்சும்மா... விளையாட்டுக்கு...)
ஆஹா.....
Deleteசில வரிகள், ஃபிரிட்ஜுக்கு வெளியில இருக்கிறமாதிரி கொஞ்சம் சூடா.
ReplyDeleteசில விஷயங்கள் ஃபிரிட்ஜுக்குள்ள வச்ச மாதிரி, ஜில்லுன்னு!
சில கருத்துகள் ஃபிரீஸர்ல வச்ச மாதிரி மனசுக்குள்ள உறைஞ்சு போய்..
புளிச்சுப் பொங்குன இட்லி மாவு மாதிரி, பொங்கி ஓடுற உரைநடை உங்கள் கைவசம். தொடர்ந்து எழுதுங்க!
நீங்க சொன்ன மாதிரி சூடாவும் சில்லுனும் பிரிட்ஜும் என் எழுத்தும் எப்போதும் ஓடும் என நம்புகிறேன்....
Deleteநன்றி பாலு....
புத்தர் காலத்துல இந்தச் சொகுசு வாழ்க்கை இல்லைங்க அகிலா. காலம் வேற மும்மாரி பொழிந்ததாம்.... நாம் அப்படியா வாழுகிறோம்? தவிர புத்தரைப் போல நாம் சந்நியாசி இல்லைங்க. நம் தேவைகளைப் பெற்று தாங்க வாழனும்.
ReplyDeleteஉங்கள் பதிவு அருமைங்க.
நம் தேவைகள் லிஸ்ட் கொஞ்சமாவா இருக்கு?...அனுமார் வாழ் மாதிரி நீண்டுகிட்டே இல்ல போகுது....புத்தர் மட்டுமல்ல யாராலும் full stop வைக்கமுடியாது.....
Deleteநன்றி.....
கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ReplyDeleteஇணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை
எனக்கும் மகிழ்ச்சிதான்....
Deleteரொம்ப அருமையா அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்!
ReplyDeleteநன்றி கவிப்ரியன்....
Deleteதங்கள் அடுத்த பதிவை
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
ஆஹா... ரமணி அவர்களே கேட்டபிறகு எழுதாமல் இருப்பேனா...விரைவில்....
Deleteகுளிர்சாதனப் பெட்டிகளின் அவசியம் ஒருபக்கம் இருந்த போதிலும் கூட அது இல்லாதவர்களும் வாழத்தானே செய்கிறார்கள்.
ReplyDeleteகுளிரசாதனப்பெட்டியின் அவசியம் கூடிபோன இன்றைய காலகட்டத்தில் அது இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ReplyDeleteஆமாம் விமலன்...அது இல்லாமலும் இருக்கமுடியும்
Deleteஎன்ன, நாம் சில சௌகரியங்களுக்கு பழகிவிடுகிறோம், அதுதான்...