Wednesday, 23 May 2012

உன் சின்ன விழியில்...





மலங்க மலங்க முழிக்கும்
உன் சின்ன விழியில்
என் விழி தெரியுதடி.....


தெருவில் அக்கா கைப்பிடித்து நடக்கும் போது
என்னை புறாவாக்கி, கடிதத்தை கையில் திணித்து
அத்தான் முன் என்னை தள்ளிய போதும்......


பள்ளிவிட்டு வரும் வழியில் குடித்த சுக்குக்காபிக்காக
வீட்டுவாசலில் காசு கேட்டு
கடைப்பையன் வந்து நின்ற போதும்...


தமிழ் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து
சினிமா பாட்டுபாடி
டீச்சர் வாசலில் நிறுத்திய போதும்...


இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன்
தலை நனைத்து
ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்...


அறை முழுவதும் காய வைத்திருக்கும் நெல்லை ஒதுக்கி,
மூலையில் கதை புத்தகத்துடன் ஒதுங்கி
சித்தியிடம் பிடிபட்ட போதும்....


காலேஜ் கட் அடித்து ஊர் சுற்றி
மினி டிராப்டரை தொலைத்துவிட்டு
அப்பா முன் நின்ற போதும்...


சேலையை யாரோ உடுத்தி கொடுக்க
மணமேடையில் தடுக்கி ஏறும் போதும்...


இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்...


என் விழியின் கதைதானே கண்ணே
நாளை உன் விழியில்....





13 comments:

  1. அருமையான நினைவலைகள்...வாழ்த்துக்கள் உங்களுக்கு.. பசுமையான வாழ்க்கையில் எல்லோருக்கும் நிகழும் நிகழ்வுகளை அப்படியே கண் முன் நிறுத்தி விட்டீர்கள்...பாராட்டுக்கள்...மேலும் முயற்சி செய்யுங்கள்...வெற்றி காண்பீர்கள்...

    ReplyDelete
  2. நன்றி தேவாதிராஜன்.....

    ReplyDelete
  3. ஐயோ மிக அருமையாக இருக்குது.....

    ReplyDelete
  4. //இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன்
    தலை நனைத்து
    ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்...//

    இது இப்பவும் இருக்குது எங்க வீட்டுல மீண்டும் சொல்லுறேன் கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....மலரும் நினைவுகள்....
      நன்றி....

      Delete
  5. இசைப்பாக்களில் மட்டும் அல்ல
    வசன கவிதைக்கும் கூட
    பல்லவி அனுபல்லவி சரணங்கள் உண்டு
    என்பதை மிக அழகாக விளக்கிப் போகும் பதிவு
    தொடக்கமும் தொடுப்பும் முடிவும்
    மிக நேர்த்தியாக அமைந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அளவுக்கு அறிவோ யோசிக்கும் திறனோ எனக்கு கிடையாது. உங்களின் பாராட்டை பெற்றதே மகிழ்ச்சிதான்....
      நன்றி ரமணி அவர்களே....

      Delete
  6. விழிபிதுங்கும் முழித்தலுக்கு
    எவ்வளவு விளக்கம் சொல்லிவிட்டீர்கள்...
    அத்தனையும் ரசனையாய்...அழகு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்....

      Delete
  7. இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்...


    என் விழியின் கதைதானே கண்ணே
    நாளை உன் விழியில்....

    தாய்மையின் புரிதல்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதற்காக தான் இந்த கவிதையை எழுதினேன், ராஜேஸ்வரி......

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....