Tuesday, 15 May 2012

பாரதி உன் மேல்......

எனக்கு கோபம்.....




பாரதி உன் மேல் எனக்கு கோபம்
நீ தானே பெண்ணை படிக்க சொன்னாய்
நீ தானே குடும்பத்தை உயர்த்த சொன்னாய்
நீ தானே சமுதாயத்தை முன்னேற்ற சொன்னாய்


படிக்கும் போது அவள் பெண் பிள்ளை
குடும்பத்தை உயர்த்தும் போது அவள் பெண் தெய்வம்
சமுதாயத்தை உயர்த்த போனாலே அவள் பெண்ணல்ல
பேதையான மாதவி......
குற்றம் சாட்டப்படுவது பெண்தான்
சாட்டுவதும் பெண்தான்....


கைப்பையுடன் வேலைக்கு போய்
கவலையுடன் திரும்பும் பெண்ணை
கைக்காட்டி சிரிக்கும் கூட்டம்
ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்....


ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே
இந்த சமூக கூட்டம்
தோழனாய் தோழியாய்
சகோதரனாய் சகோதரியாய்
சாதாரணமாய் பார்க்காத சிந்திக்காத
புறம் பேசும் பெண்களின்
புண்படுத்தும் பேச்சுகள்...
இழிவான இந்த பெண்களின் இகழ்ச்சிக்கு பயந்து
மாய்ந்து போன பெண்களை தெரியுமா பாரதி உனக்கு?


உன் கனல் கக்கும் சாட்டையடியால் 
ஆண்களிடம் இருந்து எங்களை சற்று நிமிர செய்தாய்
இன்று நீ இருந்தால் இப்படி பேசும் பெண்களை
என் செய்வாய் சொல்....


வேண்டாம் பாரதி,
நீ மறுபடியும் வேண்டாம்.....


நீ மறுபடியும் பிறந்து வந்தால்
உன் கவிதைகள் செல்லுபடியாகாது; நீ ஆவாய்.....
உன்னையும் 'புதியதோர் கவிஞன் செய்வோமென்று'
தொலைகாட்சியில் உலா விட்டுவிடுவார்கள்......
லிப்ஸ்டிக் போட்டு அமர்ந்திருப்பவர்கள் எல்லாம்
'உன் கவிதை சரியில்லை, உனக்கு எழுத தெரியவில்லை' என்பார்கள்.....
மகாகவி பாரதியை வெறும் பாரதியாக்கிவிடுவார்கள்....


அதனால் வேண்டாம்.....
நீ மறுபடியும் வேண்டாம்
இச்சமுகத்துக்கு......





21 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வலைஞன் அவர்களே.....முதலிலேயே என் பதிவை இணைத்துவிட்டேன்......

      Delete
  2. சாட்டையடி. பாரதியின் கவிதையைக்கூட கால்மேல் கால்போட்டபடி சரியில்லை என்பார்கள். நல்ல சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் விச்சு, பாரதியையே விற்றுவிடுவார்கள்....

      Delete
  3. கவிதை அருமை.
    அன்று ஜாதியை ஒழிக்க அரும்பாடு பட்டார்கள்.
    இன்று ஜாதி வாரி ஜனத் தொகை கணக்கீடு.
    பாரதியும் பதறிப் போக இன்று ஒன்றல்ல பல காரியங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். பல அநியாயமான காரியங்களை செய்துவிட்டு இந்த சமூகம் பாரதியை மறந்துதான் போய்விட்டது....
      நன்றி.......

      Delete
  4. ஆமா ஆமா முழுக்க உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கு நன்றி....

      Delete
  5. //கைப்பையுடன் வேலைக்கு போய்
    கவலையுடன் திரும்பும் பெண்ணை
    கைக்காட்டி சிரிக்கும் கூட்டம்
    ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்....

    //
    உண்மைதான் தோழி

    ReplyDelete
  6. பெண்களே.... பெண்களைக் குறை சொல்லக்கூடாது.... என்பது நல்ல கருத்துத்தான்.

    ReplyDelete
  7. பூவாய் தொடுத்தது நீங்கதானே
    மணக்கத்தானே செய்வேன்.....
    நன்றி சசி......

    ReplyDelete
  8. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கு நன்றி.....பதித்துவிட்டேன் நண்பரே....

      Delete
  9. ஆதங்கம் புரிகிறது மீண்டும் ஒரு புரட்சி செய்வோம் சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட ...............வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்வோம் தோழி......நன்றி சரளா....

      Delete
  10. நல்லதொரு பதிவு....ஆனாலும் அனுபவங்களை பதிவிடவில்லைதானே..?:)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஏற்பட்டால் தான் அனுபவமா....காதில் கேட்பதை பகிர்ந்து கொள்ளத்தானே இங்கே பதிக்கிறோம்.....
      நன்றி.....

      Delete
  11. >>'புதியதோர் கவிஞன் செய்வோமென்று'
    தொலைகாட்சியில் உலா விட்டுவிடுவார்கள்......

    Ha ha ... உண்மை



    அருமையான பதிவு ...
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....