Tuesday, 8 May 2012

உழைக்கும் வர்க்கமும்...

உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்......





       நேற்று எங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். நான்கு மாதங்களாக ஆர்.டி(RD) கட்டாததால் மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றையும் ஆர்.டி கட்ட வேண்டி எழுதிய சிலிப்பையும் ஆர்.டி புத்தகத்துக்குள் வைத்து கையில், வெளியே தெரியும்படி வைத்திருந்தேன். திங்கள் கிழமை ஆதலால் ஐந்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்...எங்கள் பகுதியில் இதுவே பெரிய கூட்டம். இல்லை என்றால் ஈ ஆடிக்கொண்டிருக்கும் எங்கள் தபால் நிலையம்.


         நான் நான்காவதாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன் நின்றிருந்த பெண்மணி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு என் சுடி எங்கே எடுத்தேன், எவ்வளவு ஆச்சு, தைக்க என்ன ஆச்சு, லைனிங் கொடுத்திருக்கிறேனா என்றெல்லாம் விசாரித்து கொண்டிருந்தார்.

      அப்போது தான் அந்த பெண்மணி அவசரமாக உள்ளே வந்தாள். கையில் ஒரு form வைத்திருந்தாள். யாராவது கிடைப்பார்களா எழுதி கொடுக்க என்பது அவள் பார்வையில் இருந்தே புரிந்தது. யாரும் திரும்பவில்லை. நான் அவளை பார்க்கவும் என்னிடம் நீட்டினாள்.


    அட்ரஸ் எழுதி இருந்த ஒரு துண்டு தாளையும் நீட்டினாள். தன் பையன் ITI படித்து கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தான் ஐந்நூறு ரூபாய் பணம் அனுப்புவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். எல்லாம் எழுதி கொடுத்தேன். 'செல்வி' என்ற தன் பெயரை கூட யாரோ சொல்லி கொடுத்த விதத்தில்தான் கையெழுத்து போட்டாள். நான் க்யுவுக்கு திரும்பும் போது இன்னொரு பெண்மணியும் அதில் சேர்ந்திருந்தார். அவருக்கு பின் போய் நின்று கொண்டேன்.

      ஏற்கனவே நின்று கொண்டிருந்த பெண்மணி என்னிடம் திரும்பி 'என்னங்க உங்க RD புக்குள்ளே ஆயிரம் ரூபாய் இருக்கா...பார்த்துக்கோங்க...' என்றார். பார்த்து விட்டு 'இருக்கே....ஏன் ? ' என்றேன்.


     'இவ என் பக்கத்து வீட்டில் தான் வேலை செய்கிறாள். அவ பார்வையே சரி கிடையாது. அதனால் நான் அவளை வேலைக்கு நான் வைத்து கொள்ளவில்லை. அதுதான் உங்களிடம் பணத்தை சரி பார்க்க சொன்னேன்' என்றார்.


     இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நான் கையில் வைத்திருந்த RD புக்கையோ பணத்தையோ அந்த வேலைக்கார பெண்மணி கவனிக்கவில்லை. அவள் கவலை பணத்தை அனுப்புவதிலும் கொடுத்து விட்டு திருப்பி வேலை செய்ய ஒடுவதிலும் தான் இருந்தது. ஆனால் குறை சொல்லிய பெண்மணியின் கவனமோ என் உடை, என் கையில் இருந்த பணம் இதில் தான் இருந்திருக்கிறது.

'Idle Mind is a Devil's Workshop' ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.....

உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....




20 comments:

  1. நல்லா சொன்னீங்க

    //உழைக்கும் வர்க்கமும்...
    உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்//

    தலைப்பும் சம்பவமும்.

    ஆம்மாம்....'Idle Mind is a Devil's Workshop'

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு மனப்பான்மை சமூகத்தில்.....கேட்டுட்டு சும்மாதான் வர முடிந்தது என்னால்...

      Delete
  2. சரியான பகிர்வுங்க... பாம்பின் கால் பாம்புதான் அறியும்.

    ReplyDelete
  3. இது போன்றோருக்கு உதவுவதை விட வேறு புண்ணியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மனதிருப்தி நமக்கு....நன்றி கருணாகரசு....

      Delete
  4. சரியான கருத்து. சிலர் இப்படிதான் நம்மிடம் பேசும்போது நம் காது, கழுத்து, கை, என்று சதா நோட்டமிட்டுக்கொண்டே பேசுவார்கள். அதைப் பார்க்க நமக்கே கூசும். என்ன பிறவியோ! இதில் அடுத்தவர்களைப் பற்றிக் குறை வேறு. ம்! மனிதர்கள்!

    ReplyDelete
    Replies
    1. சில பெண்களின் குணத்தை மாற்றவே முடியாது, கீதமஞ்சரி........

      Delete
  5. சிலர் எல்லோரிடமும் குறை ஒன்றை மட்டும் கண்டுபிடிப்பார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //சில நேரங்களில் சில மனிதர்கள்//
      சரிதான் விச்சு....

      Delete
  6. //உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....
    //

    100 % சரி

    ReplyDelete
  7. அது போல உள்ள பெண்களை அரிய வேண்டும் போல உள்ளது ...

    ReplyDelete
  8. //உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட....//

    நிச்சயமாக!.

    //ஆனால் குறை சொல்லிய பெண்மணியின் கவனமோ//

    இதை வீதியுடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை, இது வீட்டிற்குள்ளும் செல்லும் பொழுது அதன் பாதிப்புகள் வேறு விதமாக எதிரொலிக்கும் (உதா.. மாமியார் மருமகள் சண்டை, பிள்ளைகள் வளர்ப்பு etc..)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....எத்தனையோ வீடுகளில் பிரச்சனைகளுக்கு மூல காரணமே இந்த மாதிரி பெண்களின் குணம்தான்...

      Delete
  9. நல்ல பகிர்வு அகிலா!

    ReplyDelete
  10. நான் எதாவது சொன்னா தப்பாயிடும், அப்புறம் MALE CHAUVINISM அது இது னு பேசுவீங்க, உங்களில் பாதி பேர் இப்படிதாங்க ! கூடவே T V serial அது இது ந்னு, மொதல்லே அவங்களை சரி பண்ணூண்கொ அப்பறம் எங்களில் பாதி பேர் தான சரி ஆய்டுவான்? ஆனா இதையத்தை தொட்ட நிகழ்சி இது, அந்த கண்ணூக்கு தெரியாத பையன் நன்றாக படித்து தேர்ந்து அந்த ஏழை தாயை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறென் (கருணாகரன்)

    ReplyDelete
    Replies
    1. நான் ஒத்துகிறேன்.....பெண்தான் பெண்ணுக்கு எதிரியே....

      Delete
  11. நல்ல விதமாக நியாயத்தை கூறியுள்ளீர்கள் அக்கா நன்றி....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....