Wednesday, 18 April 2012

காணாமல் போன....

என் தனிமை....






என்னுடனே
உண்டு உறங்கி
பேசி பழகி
பாட்டு பாடி
படம் பார்த்து

என்னுடனே
நடந்து வந்து -சில சமயங்களில்
என்னையே ஆழம் பார்த்து
என் துணையாய் இருந்த
என் தனிமையை தொலைத்துவிட்டேன்....

என் செவிகளில் விழும்
சல சல பேச்சுகளில்
என் தனிமையை தேடுகிறேன்....

அமைதியை கூட வைத்தே இருந்தேன்
அதையும் காணவில்லை....
பேசிக்கொண்டே இருக்கும் உறவுகளுக்கு இடையில்
பேசாமலே என்னை விட்டு நீ போனதெங்கே?

கல்யாண வீடுகளில்
கடைத் தெருக்களில்
வாகன இரைச்சல்களில்
சினிமா தியேட்டர்களில் -எங்குமே
உன்னை நான் தொலைத்ததில்லையே

என் மனதின் நண்பன் நீ
என் நிழலும் நிஜமும் நீ
என்னுடன் நீ இல்லாமல்
நான் நானாக இல்லை
என்றுதான் திரும்பி என்னிடம் வருவாய்
தொலைந்தது நீயா அல்லது நானா...





8 comments:

  1. //அமைதியைக் கூட காணவில்லை// எளிமையான வரிகளில் சிலாகித்து எழுதியுள்ளீர்கள் அழகு.

    ReplyDelete
  2. தொலைக்கப்பட வேண்டியது தாங்க தனிமை.
    போகட்டும். தேடாதீர்கள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. வாசிக்கவும் யோசிக்கவும் ஒவ்வொருவருக்கும் சிறிது தனிமை தேவை. அதை நாம் தொலைத்தால் நம்மை நாமே தொலைத்து போலாகும்.....

      Delete
  3. ஒவ்வொரு கவிதையின்
    உயிர் நாடி தனிமை
    அளவுக்கும் மீறினால்
    அமுதமும் நஞ்சு
    தனிமை கூட
    நஞ்சாய் சில சமயங்களில்
    அன்பை தேடும் என்னை போன்ற
    இதயங்களில் வாழ்த்துக்கள் தோழி ....

    //சிறிது தனிமை தேவை//
    a little bit.. good post.. keet it up

    ReplyDelete
  4. நம்முடன் நாம் பேசிக்கொள்வதே தனிமை வாய்க்கும்போது தான்... நம்மை நாம் பார்த்துகொள்வதே தனிமை கிடைக்கும்போது தானே... தனிமை ஒரு கண்ணாடி...தனிமை ஒரு உற்ற நண்பன்...சில வேளைகளில் தனிமை நம் குருவும் கூட...

    ReplyDelete
    Replies
    1. எத்தனை சத்தத்திற்கு நடுவிலும் நமக்கே உரித்தான தனிமை வேண்டும்....தனிமை மட்டும் ஒரு மனிதனுக்கு இல்லாவிட்டால் அவன் அறிவு செத்து போயிருக்கும், குரு....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....