Monday, 26 March 2012

இதென்ன பரபரப்பு....


பெண்ணே.....





எழுந்த நிமிடத்தில் இருந்து
சமைக்கவும், ஹீட்டர் போடவும்
வாஷிங் மிஷின்ல துணியை திணிக்கவும்
ஹாட் பேக் தயார் செய்யவும்
ஸ்கூட்டியை கிளப்பி 
முதலில் ஸ்கூலிலும் பிறகு அலுவலகத்திலும்
மாலையில் பாட்மிட்டன் கிளாசில் பையனையும்
டான்ஸ் கிளாசில் பெண்ணையும் இறக்கிவிட்டு
காய் வாங்கி சமையல் முடித்து
மறுபடியும் இருவரையும் சுமந்து வந்து
படிக்க வைத்து, உண்டு, உறங்கி
இடையில் கணவரின் எழுப்புதலுக்கு உடன்பட்டு
மீண்டும் காலை வேளை......

பூக்களுடன் பேச நேரமில்லாமல்....
பட்டாம்பூச்சியை பார்க்க முடியாமல்....
பறவைகளை தொலைத்துவிட்டு தேடாமல்....
சேலை மடிப்பை கூட ரசித்து கட்டமுடியாமல்....
ஓட்டமும் நடையுமாக
இதென்ன பரபரப்பு பெண்ணே....

வாகனங்களின் நெரிசல்களில்
முகமூடியாய் நாம் - நம்
முகத்தை தொலைத்து.....
சத்தங்களின் இடையில்
சாந்தமாய் நாம் - நம்
மனசாந்தியை இழந்து.....





ஓட்டம் குறைத்து
ஒரு நிமிடமாவது நிதானித்து
நிமிர்ந்து பாருங்கள்
வானம் தெரிகிறதா என்று....
வானின் நிர்மூலம் கூட
அழகுதான்.....
அங்கங்கே தெரியும் மேகங்கள் கூட
அழகுதான்......
பறக்கும் காகங்களும் வல்லூறுகளும் கூட
அழகுதான்.....
இவற்றுக்கிடையில் உற்றுப் பாருங்கள்
நம் மனம் லேசாகி பறப்பது கூட தெரியும்
அதுவும் அழகுதான்.....






20 comments:

  1. பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் பரவசம் காணும் முயற்சியிலாவது பெண்கள் இறங்கவேண்டும் என்கிறீர்கள். மிகவும் சரி. வாழ்க்கையின் ஓட்டத்துக்கு எரிபொருளாயேனும் இயற்கையின் ரசனை உதவக்கூடும். பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  2. இன்றைய இல்லத்தரசிகளின் நிலைமையை...

    படைப்பாளிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் உங்கள் பதிவில் என்னை தெரிச்சவுங்களா காட்டியதற்கும் நன்றி.....

      Delete
  3. கால ஒட்டத்திற்கு தகுந்தாற் போல நிதானமில்லாமல் ஒடிக் கொண்டிருக்கின்றனர் எப்போது அவர்கள் நிதானிக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்குகிறார்களோ அப்போது அவர்கள் வாழ்க்கை வேகமாக ஓடி முடிவுக்கு வந்துவிடுகிறது என்பதுதான் உண்மை

    ReplyDelete
  4. படபடப்பாய் பதற்றமாய் வேகமாக நம் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. நின்று நிதானித்து அருகாமையிலுள்ளவர்களைக் கூட முகம்பார்க்காமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அருமையாகவும் அதே வேகத்துடனும் படைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிதானிக்கவே நேரம் இல்லாத ஒரு வாழ்க்கையை நகரத்தில் உள்ள பெண்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....நன்றி விச்சு....

      Delete
  5. ஊருக்காகவும் உறவுக்காகவும் மட்டுமே வாழும்போது இந்த சலிப்புகள் வந்து... அதிகமாகி...மன நோயாகவோ... விரக்தியிலோ முடியலாம்....நேரம் கிடைக்காது....நாமே நமக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கி....நம் ரசனைக்கென்று...நமகீன்று ஒரு வாழ்க்கையையும் வாழ ஆரம்பித்தால்.... என்றுமே மகிழ்ச்சி தான்....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் குரு.....

      Delete
  6. மறுப்பதற்க்கு மன்னிக்கவும் உங்கள் கூற்று சரிதான்! ஆனால் எங்கள் வீட்டில் வாஷிங் மெஷின், ஹாட் பேக், காஃபி தவிர எல்லாம் அடியெந்தான், எதிர்வீட்டு மாமா காஃபியும் சேர்த்து ! அம்மா தாயே மறுபக்கங்களும் உண்டு!! எங்களையும் கொஞ்சம் பாருங்களென்,!!??

    ReplyDelete
    Replies
    1. மெஜாரிட்டியை தானே பார்க்க முடியும்....நீங்களும் மெஜாரிட்டி ஆகுங்க, அப்போ பார்க்கலாம்...

      Delete
  7. மனம் கனக்கக் காரணமும்
    அது லேசாகச் சொன்ன உபாயமும்
    மிக மிக அருமை
    எதுவும் வெளியில் இல்லை
    எல்லாமே நமக்குள்ளேதான்
    தீதும் நன்றும் பிறர் தர எப்போதும் வருவதில்லை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நம் மனம் நம்மிடம் இருப்பதையே நாம் மறக்கிறோம். அதன் போக்கில் விட்டாலே அது இந்த வசந்தமான இயற்கையை நமக்கு ரசிக்க கற்று கொடுத்திருக்கும். நன்றி ரமணி அவர்களே....

      Delete
  8. என்ன ஆச்சரியம் சகோ நம் சிந்தனை ஒத்துப்போகிறது இருவரும் ஒரே கருத்தை பதிவாக்கிய விதத்தை சொல்கிறேன் . உதாரணங்களாய் பதிவில் இதே கருத்தை மையமாக கொண்டு நானும் பதிவாக்கயுள்ளேன் .

    ReplyDelete
  9. சசி, உங்க பதிவை படித்து பதிலும் எழுதினேன். நாம் பெண்கள் தானே....ஒரே மாதிரியாகத்தானே யோசிப்போம்

    ReplyDelete
  10. பூக்களுடன் பேச நேரமில்லாமல்....
    பட்டாம்பூச்சியை பார்க்க முடியாமல்....
    பறவைகளை தொலைத்துவிட்டு தேடாமல்....
    சேலை மடிப்பை கூட ரசித்து கட்டமுடியாமல்....
    ஓட்டமும் நடையுமாக
    இதென்ன பரபரப்பு பெண்ணே.

    கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துகொள்வது மாதிரியான அருமையான படைப்புகள்.. பாராட்டுக்கள்.>

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஸ்வரி....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....