Saturday, 25 February 2012

கண்ணாடி போதாதா....



கிளியும் கிண்ணமும் எதற்கு மகளே?


Reproduction of Ravi Varma's by me.... 


செப்பு உதடும் செதுக்கிய மூக்கும் 
சுருள் முடியும் சுறுசுறு கண்களும் 
காது கடுக்கணும் கால் கொலுசும் 
என் அழகு தேவதையே

என் குட்டி பதுமையின் 
தலைவாரி பொட்டிட்டு
அலங்கார ஆடை உடுத்தி 
உச்சி முகர்ந்து திருஷ்டியும் கழித்து 
உன் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு 
வா மகளேஉலகம் பார்க்க செல்வோம்.....
இந்த உலகம் பார்க்க செல்வோம்.....



15 comments:

  1. ரவி வர்மாவின் ஓவியத்தை
    அதன் அழகும் நேர்த்தியும் குறையாது
    மிக அழகாக வரைந்தும் அதனைப் பதிவாக்கித்
    தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி
    கவிதையும் அதற்கான விளக்கமாக அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    சரியாகச் சொன்னால் சொக்கிப் போனது மனது
    எனத்தான் சொல்லவேண்டும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர்ந்து தர வேண்டுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி, ரமணி அவர்களே....

      Delete
  2. உங்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியத்தைக் கண்டு ரசித்தேன், வியந்தேன். அருமை. கவிதையும் மனதைக் கொள்ளை கொண்டது. அவ்வப்போது உங்கள் (ஓவிய) கைவண்ணத்தை வெளியிடுங்கள் தோழி.

    ReplyDelete
  3. நன்றி தோழி
    ஆனா இப்ப செப்பு உதடுகள் இல்லையே சாயம் பூசிய பொய்மை இல்லை பெண்மைகள் இல்ல இறுக்கு,செதுக்கிய மூக்கு அது என்னவோ சரிதான் இப்ப எல்லோர் மூக்கிலும் செதுக்கி செதுக்கி நிறைய ஓட்டைகள் அதுல மூகுதியா இல்லை சீரியல் பல்புனே தெரியல தலை வாரி பூசுடி, உண்மையில் அப்படி எல்லாம் இருக்கா எனக்கு என்னமோ டவுட் நீங்க டைம் மெசின் ஏறி 19 நூறு ட்டண்டுல இருந்து தப்பா வந்திடீன்களோ

    ReplyDelete
  4. அன்பு சகோதரி..
    ஓவியத்தின் வித்தகர் ரவி வர்மாவின்
    ஓவியப்படைப்பின் சிந்தை தவறாத
    அழகிய ஓவியம்..

    அதற்கேற்ற நெஞ்சில் நிற்கும்
    இனிய பாடல்..
    படித்து படித்து
    பார்த்து பார்த்து ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்...

      Delete
  5. ரவிவர்மாவின் இந்த படைப்பை இதுவரை கண்டதில்லை! கவிதை நன்று! இன்னும் மெருகேற்றுங்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி....

      Delete
  6. உங்கள் ஓவியம் அழகு. அதுவும் குட்டிக் குழந்தை குனிந்து கண்ணாடி பார்ப்பது கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, விச்சு....

      Delete
  7. உலகைப் பார்க்க மகளை கிளப்பும் தாயின் பாடலும்,ஓவியமும் ந்ன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமலன் அவர்களே...

      Delete
  8. உங்கள் ஓவியம் அருமை...ரவி வர்மாவின் படைப்பும் அருமை...தொடரட்டும் உங்கள் ஓவியபணி..
    நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

    ReplyDelete
  9. நன்றி ராஜா.....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....