Saturday, 18 February 2012

மகிழ்ச்சி.....

           பகிர்வதில்தான் உள்ளது......




                என் பதிவுலக நண்பரான ரமணி அவர்கள் தனக்கு கிடைத்த 'லீப்ச்டர்' என்கிற இளம் வலைபதிவர்களுக்கு வழங்கும் ஜெர்மானிய விருதினை ஒரு அங்கீகாரத்தை தனக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறார். அதில் என் வலைப்பூவும் ஓன்று என்பதில் மகிழ்ச்சிதான். நண்பர் ரமணிக்கு என் நன்றிகள்.....


                  மேலும் இந்த விருதின் அடையாளமே இதை மேலும் ஐவருக்கு பகிர்ந்தளிப்பதுதான். எனக்கு பிடித்தமான ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு (200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்கள் ) பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்....அவர்களும் இதை ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அதிகமான வலைப்பூக்கள் அறிமுகபடுத்தபடுகிற வாய்ப்பும் அமைகிறது. இந்த விருதின் விதிக்கு ஏற்ப, ஐந்து இளம் பதிவர்களுக்கு வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.


அவர்கள் இவர்கள்தான் :


திரு மயில்வாகனா அவர்களின் முல்லைவனம் 


ஆதிமனிதன் அவர்களின் ஆதிமனிதன் 


உத்தமபுத்திரா அவர்களின் தமிழ்க்கவிதைகள் 


நூர் முகமது அவர்களின் நம்ம ஊர் 


பாபு நடேசன் அவர்களின் தமிழ் அறிவு கதைகள் 



13 comments:

  1. விருதினை ஏற்றுக் கௌரவித்தமைக்கும்
    விருதினை தரமான பதிவர்களைத் தேர்ந்தெடுத்துப்
    பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்குதான் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.....
      இந்த விருது என்ற ஒன்றை என் கையில் கொடுத்து எனக்கும் பதிவுலகில் ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்கு.....நன்றி ரமணி அவர்களே....

      Delete
  2. Replies
    1. நன்றி ரத்னவேல் ஐயா அவர்களுக்கு.....

      Delete
  3. விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  4. விருது பெற்ற தங்களுக்கும்
    தங்கள் கையால் விருது கிடைக்கப்பெற்றவர்களுக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்.....

      Delete
  5. அன்பு தோழி அகிலாவுக்கு...!
    என் படைப்புகளை மதித்து எனக்கும் விருதினை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி - மேலும் நல்ல படைப்புகளை படைக்க தூண்டுகோலாய் இருக்கும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .................................

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரபாகரன்....

      Delete
  7. என் படைப்புகளை மதித்து எனக்கும் விருதினை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நன்றிகள் தோழி. நட்பு வட்டத்தைப் பெருக்கும் அங்கீகார விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மேலும் புதிய திறமையாளர்களை நட்பு வட்டத்தில் இணைக்க உதவும் இந்த விருதிற்கும் உள்ளார்ந்த நன்றிகள்.

    விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அளவில் எமது பதிவு தங்களின் கவனத்தைப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    இறை அருளோடு தங்கள் வாழ்வும் வளமும் சிறக்கவும், உங்களின் பதிவுகள் மேலும் சிறக்கவும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....