சித்திரங்கள் பேசும்.....
சித்ரகலா அகாடமி......
34வது ஓவிய கண்காட்சி
கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கம், கோவை
பிப்ரவரி 15 முதல் 19 வரை
அந்த அரங்கம் ஓவியங்களின் வண்ண கலவைகளை உள்வாங்கியிருந்தது
சித்திரங்களால் தத்துவரூபமாகி போயிருந்தது
தூரிகைகளின் அட்டகாசங்களும்
வண்ணங்களின் வீச்சுகளுமாக
தடுக்கினால் மாடுகளும் தென்னைகளும்
நிமிர்ந்தால் வானமும் மலையுச்சியும்
காதலில் கண்ணனும் ராதையும்
ஒத்தையடிசாலையில் மாட்டுவண்டிகளும்
என்ன ஒரு இனிய விரிதல் கண்முன்னே
நிஜங்களா இவை?
இல்லை.....
தூரிகைகளின் நிழல்கள்.....
வெளிவர மனதில்லை ஓவியகூடத்தைவிட்டு...
இவையெல்லாம் நம் வீட்டின் சுவர் ஆகாதா என்ற ஏக்கம்...
சிறு குழந்தைகள் கூட பெரிய ஓவியர்களான அதிசயம்....
ஓவியங்கள் கூட நம்மை அழகாக்குமா...
வண்ணங்கள் நமக்கு வானவில்லை காட்டுமா....
ஆச்சிரியமாய் பார்த்துவிட்டு வந்தேன்.....
கூடுதல் தகவல்
சித்ரகலா அகாடமியில் கடந்த 34 வருடங்களாக ஞாயிறுதோறும் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கிறார்கள்.......
தொடர்புக்கு : 9363145521 ; 9894149275
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


நல்ல ஓவியங்கள்,வாழ்த்துக்கள் மேடம்.அதிலும் கடைசி ஓவியம் இன்னும் மனதில் சிறகடிக்கிறது.
ReplyDeleteஇன்னும் நிறைய ஓவியங்கள் சித்ரகலா அகாடமி அங்கத்தினர்கள் வரைந்தது மற்றும் அங்கு பயிலும் குழந்தைகள் வரைந்தது....ரொம்ப அழகு....
ReplyDeleteநன்றி விமலன்....
அருமையான பதிவு.. ஓவியர்களின் தூரிகைகள் உயிர்ப்புடன் இருக்கும் வலை வாழும் இக்கலை. -suresh seenu
ReplyDeleteவருகைக்கு நன்றி.....
Deletenalla thakaval...oviya kankaachchi manathil vanthu selkirathu...valththukkal pakirvukku
ReplyDeleteஎன் நன்றிகள், சரவணன்....
Deleteஉங்கள் எழுதோவியத்தோடு நீங்கள் இணைத்து இருந்த ஒவியங்களும் மிக அழகு. ஒவியம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதோடு அதை வரைவதால் மனதுதை ஒருமுனை படுத்தவும் முடிகிறது. நல்ல தகவல்கள் நன்றி
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பது போல் ஓவியகலை என்பது மனதை ஒருமுகபடுத்தவும் சாந்தபடுத்தவும் உதவுகிறது......
Deleteஉங்களின் வருகைக்கு நன்றி....
முடிந்தால் வோர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள் அதனால் எந்த பயனும் இல்லை மேலும் அதிக கமெண்ட் கிடைக்க வழியுண்டு.
ReplyDeletei'll do that....
Deleteஎதைச் சொல்ல, எதை விட... அனைத்துச் சித்திரங்களுமே கண்ணையும் கருத்தையும் கவர்கின்றனவே... நானும் ஆச்சரியமாகவே பார்க்கிறேன் இந்த ஓவியங்களை! 34 வருடங்களாக இளஞ்சிறுவர்களுக்கு ஓவியம் கற்றத் தந்து ஊக்குவிக்கும் சித்ரகலா அகாடமிக்கு பாராட்டுகள்+ நல்ல விஷயத்தைப் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteபாராட்டுக்குரியவர்கள் சித்ரகலா அகாடமி உள்ளவர்கள் தான்....ஓவியர் ஜீவா அவர்கள் முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.....
Deleteஉங்கள் வருகைக்கு நன்றி....
மிக மிக அருமைங்க எந்த ஓவியமும் வரைந்தது போல இல்லாம புகைப்படம் போல அத்தனை அழகு .
ReplyDeleteஉண்மைதான் சசி, குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.....நன்றி சசி....
Delete