Tuesday, 31 January 2012

ஆசை.....

தீர்ந்தது......




அண்ணாச்சி கடை தாண்டும் போது ஆசை 
அச்சிறுமியின் கண்களில் 

மிட்டாயின் வண்ணங்களை பார்க்கையில் ஏக்கம்
மனதின் வியாபாத்தில் 

தாயின் கைப்பிடி இழுத்தலில் அழுத்தம் 
புரிந்தது அவளின் இயலாமை  

போன அப்பாவை அழைத்து அழுதாள் உடல் 
வலித்தது அம்மாவின் அடியில் 

கரைந்த மனிதர் ஒருவர் வாங்கிதந்தார் நித்தமும்  
கனாகண்ட மிட்டாயை 

சந்தோஷத்தில் குதித்தாள் சிறுமி 
அடுத்த அப்பா என்று நினைத்து.......






    

10 comments:

  1. அருமையான வரிகள்.........சிறுவர்களின் மனதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அருமையான படைப்பு
    குழந்தையின் பார்வையில் சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    தலைப்பும் இறுதி வரிகளும் கவிதையின்
    எல்லையைத் தாண்டி நிறையச் சொல்லிப் போகுது
    கவிதையின் பலம் என்பது அதுதானே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  3. ///தாயின் கைப்பிடி இழுத்தலில் அழுத்தம்
    புரிந்தது அவளின் இயலாமை
    போன அப்பாவை அழைத்து அழுதாள் உடல்
    வலித்தது அம்மாவின் அடியில் ///

    மிக சிறந்த வரிகள்.
    கவிதையை படித்ததும் மனம் அழுகிறது இது போன்ற சிறுவர்களை எண்ணி........

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்க்கும் சில காட்சிகள் நம்மை ஆழமாக பாதித்துவிடுகிறது....நன்றி நண்பரே....

      Delete
  4. குழந்தையின் சின்ன சின்ன ஆசைகள்.தாயின் இயலாமை. கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
  5. கவிதை சின்னஞ்சிறு குழந்தையின் பார்வையிலிருந்தும் கூட வரும் என்பதைத் தெரிந்து கொண்டேன். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....