இறக்கும் அக்கணமே...
நீர் விட்ட மண்ணின்
ரோஜா மலர்வதும்
நிர்மலமான நீரில்
நீர்க்குமிழி நீச்சலடிப்பதும்
கனவுகளின் சுமைகளில்
கவிதைகள் பிறப்பதும்
மனம் பிடித்த மானுடத்தின்
மையல் மலர்வதும்
சந்தோசம் நிச்சயிப்பதும்
உயிரின் கலப்பு
உண்மையின் வசம் இல்லாததும்
உடலும் மனமும் வேறு என்பினும்
உயிர்மை துளிர்ப்பதும்
காதல் செத்து மணம் கைகூடின்
உறுத்தும் பெண்ணின் ஆன்மா
இறக்கும் அக்கணமே.....
உணர்வுக் கவிதை..
ReplyDeleteநன்று சகோதரி.
நன்றி மகேந்திரன்....
Delete///காதல் செத்து மணம் கைகூடின்
ReplyDeleteஉறுத்தும் பெண்ணின் ஆன்மா
இறக்கும் அக்கணமே.....//
உண்மைதான்
மதுரை தமிழன் அவர்களுக்கு நன்றி....
Deleteஅழகுக் கவிதை! மிக ரசித்தேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகணேஷ் அவர்களுக்கு நன்றியும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களும்...
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteமனம் முறிய மணம் துளிர்ப்பது என்பது கூட
வீழந்த் மரத்தில் தளிர் தழைப்பது போலத்தான்
அருமையான பதிவு
கடைசி வார்த்தையை பெரிதாக கொடுக்காவிட்டாலும்
கவிதையின் உயிர் அங்கிருப்பது நிச்சயம்
படிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே...
Deleteபதிவு எழுதுவதில் அனுபவம் உள்ளவர் நீங்கள்...உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்...பின்பற்றுகிறேன்...
உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
வார்த்தை சரிபார்ப்பை நீக்கினால்
ReplyDeleteபின்னூட்டமிடுவோருக்கு கொஞ்சம்
வசதியாய் இருக்குமே..
சரி பண்ணிவிட்டேன்.... நன்றி...
Deletethanks...
ReplyDelete