Wednesday, 4 January 2012

தேடிய காதல்

கிடைத்த இடம்....





அக்னியை வலம் வருவதாக நினைத்து 
உன் சுண்டு விரல் பிடித்து கடற்கரையில் நடந்தபோது 
அடித்த மின்சாரத்தில் தானே 
இந்த மாநகரமே வெளிச்சமாகியது...

எங்கு புதைத்தாய் கண்ணே 
நம் ஆத்மார்த்தமான காதலை 

கடற்கரை மணல்வெளியிலா?
படகு மறைவிலா?
கலங்கரை விளக்கின் உச்சியிலா?
இல்லை நீல்கடலின் ஆழத்திலா?
எதில் கண்ணே கூறு...

ஓ...இது ஆத்மார்த்தமான காதல் அல்லவா
உன் ஆத்மாவுக்குள்தான் இருக்கிறது
எங்கும் தொலைக்கவில்லை நீ 

நம்புகிறேன் இப்படிதான் 
தேடிக் களைத்த பிறகு...


4 comments:

  1. தலைப்பும் படமும் பாதிச் சொல்லிப் போகிறது
    பதிவு மீதியை மிக நேர்த்தியாய்
    படிப்பவர் மனம் சேர்த்துப் போகிறது
    தேடத் துவங்கினாலே
    அது காணாமல் போனதுதானே ?
    இறுதி வரிகள் கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என் கவிதைகளை ஊக்குவிக்கும் உங்கள் வரிகளுக்கு என் நன்றி....

    ReplyDelete
  3. நன்றி ஜெயகுமார்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....