Monday, 26 December 2011

முதியோர் என்றொரு கவிதை







என் கத....


வெவரம் தெரியாத வயசுல   

ஆத்தாளும் அப்பனும் நல்லவைங்கதான்...

கம்பஞ் சோறும் கருவாடும் சக்கரதான்...

வீட்டு முத்தம் சொர்க்கம்தான் ஆத்தா...  




வெவரம் தெரிஞ்ச வயசுல  

வாக்கப்பட்டு போன எடமே சரிபடலதான்  

மாமியாளும் கொளுந்தியாளும் கெட்டவைங்கதான்...

அரிசி சோறும் வத்த கொழம்பும் கசப்புதான்...

இனிச்சது புருசன் மட்டும்தான் ஆத்தா....




வெவரம் புரிஞ்ச வயசுல 

மகனும் மருமகளும் அந்நியந்தான் 

வந்து வாய்ச்சவ சரியில்லதான்...

வறுபடுறது புருசன் மட்டும்தான் ஆத்தா...




வெவரம் தப்புன வயசுல 

கண்ணு இருண்டு போச்சுதான் ...

காது கேக்காம போச்சுதான்...

கூழும் கஞ்சியும் இறங்கலத்தான்....

தொண ஆரும் இல்ல, நா மட்டும்தான் ஆத்தா.....   








   

   

6 comments:

  1. எளிய, இயல்பான நடையில் வாழ்வியல் நடப்பை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அகிலா மேடம்! நன்று. மிக ரசித்தேன். உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி....இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், நண்பரே.....

    ReplyDelete
  3. மனம் கசக்கி விழிகளில் நீர் சுரக்கச் செய்து போகும்
    அழகான பதிவு
    படங்களும் வார்த்தைப் பிரயோகமும் அருமை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முதியோர் இல்லம் ஒன்றிற்கு சென்றுவந்ததின் அழுத்தம்தான் இந்த கவிதை....நன்றி நண்பரே, என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....