Skip to main content

ரயில் பயணங்களில் 1....

ஜீன்ஸ் போட்ட அம்மா




குழந்தைகளுடன் பயணம் செய்யும் நவ நாகரீக யுவதிகளை நாம் ரயில், பேருந்து மற்றும் விமான  பயணத்தின் போது பார்த்திருப்போம். நிறைய பெண்கள் தன உடை மற்றும் கைப்பையில் செலுத்தும் கவனத்தை கூட தன் குழந்தையின் மேல் காட்டுவதில்லை. பாவம் பிள்ளையை பெற்ற ஆண்கள். அந்த எட்டு மணி நேர பயணத்தின் போது எட்டு மணி நேரமும் குழந்தை அவர்களிடம்தான் இருக்கிறது. 

ஒரு சமயம் என்னுடன் பயணித்த தம்பதிகளின் ஏழு மாத குழந்தை அழுதுக் கொண்டேயிருந்தது. அந்த பெண்ணுக்கு குழந்தையை தூக்கவும் தெரியவில்லை; அதை அணைத்து சமாதானப்படுத்தவும் தெரியவில்லை. அவள் கணவன்தான் வைத்திருந்தான். கேட்டால், 'அய்யய்யோ, எனக்கு குழந்தை எல்லாம் பார்த்துக்க தெரியாது.' என்று ஒரு படம் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவன் மட்டும் என்ன ஏற்கனவே பத்து பிள்ளைகளை வளர்த்தவனா என்ன...

ஒரு முறை விமானத்தில் ஒரு பெண் விமானம் take off ஆகும்போது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், பணிப்பெண் குழந்தைக்கு பால் புகட்ட கூறிவிட்டு சென்றாள். உடனே அந்த பெண் தான் போட்டிருந்த டி- சர்ட்டை சட்டேன்று தூக்கியபோது ஒரு நிமிடம்  பதறி விட்டேன். கழுத்தை சுற்றி போட்டிருக்கும் shawl வைத்து மூட வேண்டும் என்பது கூட தெரியாமலா இருக்கிறார்கள் இப்போதைய பெண்கள்?   

இப்படிப்பட்ட பெண்களையே பயணங்களில் பார்த்து பார்த்து அலுத்து போயிருந்த எனக்கு அன்றைய ரயில் பயணம் ஒரு அதிசயத்தை காட்டியது. கோயம்பத்தூரில்  இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரசில் ஜீன்சும் குர்தாவும் அணிந்த அந்த பெண்ணை குழந்தையுடன் அவள் கணவன்    ரயிலில் ஏற்றிவிட்டு சென்றான். 

இன்றைக்கு நம் பயணம் அவ்வளவுதான் என்று நினைத்தேன். நேர் எதிர்மறையாக, அந்த பெண் தன் குழந்தையை தன்னிடமே வைத்துகொண்டு அதற்கென்று சாப்பாடு, தண்ணீர், டவல், உடை எல்லாமே தானே கொடுத்து அழகாக குழந்தையை சமாளித்து....அதிசயித்து போனேன் நான்....இவளை பெற்றவளும் திருமணம் செய்தவனும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்தேன். பயணம் முடிந்து சென்னை வந்து இறங்கும் போது அவளுடைய பெற்றவர்கள் அழைத்து செல்ல வந்திருந்தார்கள். என்னால் அவர்களை பார்த்துவிட்டு சும்மா போக முடியவில்லை. அவர்களிடம் அந்த பெண்ணை புகழ்ந்து நாலு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன். Hats off to that girl....  

பெண்களே, உங்களின் வெளி அலங்காரங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், மனதின் உள்ளே நீங்கள் ஒரு குழந்தையின் தாய் என்பதை மட்டும் மறக்காதீர்கள். 


Comments

  1. niraya pengal thai agave virumbuvathillai enbathai ariveergala?

    ReplyDelete
    Replies
    1. i know that....
      இப்படி நல்ல பெண்களை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது ....
      தாய்மை சாகவில்லை என்ற நம்பிக்கை உண்டாகிறது ...

      Delete
  2. உங்களின் பார்வை மிக பாராட்டதக்கது.

    என் குழ்ந்தையை என்மனைவி பார்த்து கொள்வதைவிட நீங்கள் சொன்னபடி நான் அதிகம் பார்த்து கொண்டேன் அதனால் என் மனைவிக்கு பார்க்க தெரியவில்லை என்று அர்த்தம் எடுத்துக்க கூடாது. காரணம் மனைவியின் மேல் உள்ள அக்கறையால் அவளுக்கு அதிகம் கஷ்டம் கொடுக்க கூடாது என்பதனால் என்ன்னை போல உள்ளவர்கள் உதவி செய்கின்றோம்.

    ஆனால் நீங்கள் சொன்னபடி நிறைய சீன் காண்பிக்கும் பெண்கள் இப்போது அதிகம் என்பதை ஒத்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டிலும் இதே நிலைமைதான்....தன் குழந்தையை சிரத்தையுடன் பார்த்துக்கொள்ளும் பெண்கள் குறைவுதான்.....

      Delete
  3. உங்களின் இந்த பசுமையை நோக்கிய பயணத்தை வரவேற்கிறேன், அருள்....

    ReplyDelete
  4. உங்கள் வ்லைப்பூ அழகா இருக்குங்க்கா! என்னோட வலைப்பூ www.padithurai.blogspot.com படிச்சிட்டு உங்க கமெண்ட்டைப் போட்டீங்கன்னா கோயமுத்தூர் கோணியம்மனுக்கு உங்க பேர்ல அர்ச்சனை பண்ணுவேன்! ;-) தவிர, நான் இன்னிலேர்ந்து ஃபேஸ்புக்லயும் இருக்கேன்.

    ReplyDelete
  5. கிருபா...அழகா தைரியமா எழுதி இருக்கீங்க....நிறைய எழுதுங்க.....கமெண்ட் போட்டிருக்கேன், அதுக்காக எல்லாம் நம்ம கோணியம்மனை தொந்தரவு பண்ணிக்கிட்டு......

    ReplyDelete
  6. அவர்கள் குழந்தையை பிரசவித்தவர்களாக இருக்கலாம்
    தாயாக பிறக்காதவர்களாக இருக்கலாம்
    தலைப்பு அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....

      Delete
  7. உங்களின் அழகா பார்வையும் நோக்கமும் சிந்தனயும் அருமை மேலும் எழுதுங்க அக்கா

    ReplyDelete
  8. சில நேரங்களில் நீங்கள் எழுதுவதை போல் நாங்கள் எழுத முடியாது .அப்படியே மீறி எழுதினால் எங்கள் பார்வையில் தான் கோளாறு என்பார்கள் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ...அதனால் தான் நாங்க எழுதுறோம்...நன்றி பிரசன்னா...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந