Skip to main content

Posts

Showing posts from January 6, 2013

கோவை பதிவர்களின் புத்தகங்கள்....

புத்தக வெளியீடு  கோவை பதிவர்களின் மூன்று நூல்கள் வெளியீடு  இன்றைய புத்தக கண்காட்சியில்  டிஸ்கவரி புக் பேலசில்  (அரங்கு எண் 43 & 44).... கிடைக்கும்... உங்களின் ஆதரவு வேண்டுகிறோம்... அகிலா (நான்தான்) - சின்ன சின்ன சிதறல்கள்   சரளா - மௌனத்தின் இரைச்சல் ஜீவா - கோவை நேரம்

முதல் கவிதை சிதறல்....

என் கவிதையை இதுவரை என்னுடனே அனுபவித்து வந்த என் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.... முதலுமாய் முத்துமாய் என் கவிதை குழந்தை சின்ன சின்ன சிதறல்களாகவே உங்களின் கைகளுக்கு... இன்று முதல் சென்னையின் புத்தக கண்காட்சியில்  டிஸ்கவரி புக் பேலசில் (அரங்கு எண் 43 & 44) கிடைக்கும்   என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

பனி மூடிய காலை...

மாலை முகட்டிலிருந்து  மெல்ல கீழிறங்கும் மேகங்கள்... மின்சார கம்பிகளின் மேல்  பறவைகளின் சத்தம்  இல்லாத ஒடுக்கம்...  பாதையின் குறுக்கும் நெடுக்குமான  தன் ஓட்டத்தை குறைத்துகொண்டு   சோர்ந்திருக்கும் காடைகள்... முகமூடியாய் நடக்கும்  மப்ளர் மனிதர்கள்... இறுக்கமில்லா நினைப்புடன்  என் முகம் தொட்ட பனியை      முழுதாய் சுவாசிக்கும் நான்...

பூச்சாண்டி.....

சோறு ஊட்டும் போதும், தூங்க செய்யும் போதும் ஒரு தாய் தன் குழந்தைக்கு பூச்சாண்டியை வைத்து படமும் பயமும் காட்டுவாள்... சாப்பிடும் போது பூச்சாண்டியை நினைக்கும் ஒரு குழந்தை தான் பலசாலியாகி அந்த பூச்சாண்டியை எதிர்த்து நிற்க வேண்டும்  என்கிற  தைரியம் பெறும்... தூங்கும் போது அவனை நினைக்கும் ஒரு குழந்தை யாரையும் ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ தைரியமற்று தன் அன்பில் இருப்பவர்களையே காயப்படுத்திப் பார்க்கும்... இவை அனைத்தும் பூச்சாண்டியை அறிமுகப்படுத்தும் அந்த தாயிடம் தான் இருக்கிறது... அவளின் அந்த செயல் தவறில்லை - ஆனால் அதை போராடி வெற்றி கொள்ளும் தன்மை அல்லது  அதை பார்த்து பயந்து ஒளிந்து கொள்ளும் தன்மை இரண்டில் எதை அவள் கற்று தருகிறாள் தன் குழந்தைக்கு   என்பதில் தான் அக்குழந்தையின் வாழ்வின் சூட்சமமே அடங்குகிறது.... ஆறடி உயர்ந்த மனிதனாய் வளர்ந்து  நாலு பேரை அடித்துவிட்டால் அவனை தான்  தைரியமாய் வளர்த்திருக்கிறோம் என்று  பெற்றோர் பெருமை கொள்ள முடியாது.... பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரியம் இழந்தவன் தான்  அதை உடலளவில் எதிர்க் கொள்கிறான்......  அந்த கு