பாக்கு மரங்களிடையில் பாயும் கம்பிகளாய் மழை... சாய்க்க முடியாத சங்கடத்தில் சரம்சரமாய் மணலில்.... நிழற்குடையின் மேல் நிதர்சனமில்லாமல் மழை... நிற்கிற மனிதர்களை தீண்டமுடியாமல் குழிபறித்து மணலில்...... ஒத்தையடி சாலையில் உக்கிரமாய் மழை... குடையாய் சேலை தலைப்பு விரித்து கூடையை தலையில் கமத்தி விரசலாய் ஓடும் பெண்களை குறிவைத்து.... இந்த முறை வென்றது மழைதான்... முக்காடிட்டவர்களை முழுவதுமாய் நனைத்து மகிழ்ச்சியாய் மண்ணை தொட்டது....