Skip to main content

Posts

Showing posts from September 11, 2016

பெரியாரும் பெண் முன்னேற்றமும்..

பெரியாரும் பெண் முன்னேற்றமும் "ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்." பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. "பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்." அதுவும் சட்டமாகியிருக்கிறது. "கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை." அதையும் செய்துவருகிறோம். தந்தை பெரியார் சொன்ன, செயலாக்கிய, செயலாக்கம் பெற போராடிய, பெண் உரிமையை, விடுதலையை, கிட்டதட்ட நெருங்கிய பின்பும் சமூகத்தில் ஏன் இத்தனை பெண் சார்ந்த வன்முறைகள்? தனக்கு எதிராய் பெண்ணை ஏற்றுக் கொள்ளமுடியாத ஆண்வர்க்கத்தின் நிலைபாடும் இதற்கு ஒரு காரணம். இன்றைய ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள், அவர்களுடன் பழகும் பெண்பிள்ளைகளை, தோழிகளை, அவர்களுடன் பயிலும் சக மாணவிகளை, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை எவ்வாறு சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு அணுகவேண்டும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலையும்,

பெண்களுக்கு..

விரல்கள் பத்திரம்.. உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன். அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார். காரணம் கேட்டால், 'சமைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன் இத்தனை வருஷமாக, அதுதான்' என்று அதற்கு தெளிவாக ஒரு பதிலும் சொன்னார். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாங்கு மாங்கென்று நேர்ந்துவிட்ட மாதிரி சமையல்கட்டில் வேலை பார்ப்பார்கள். அந்த நேரத்தில், தன் கைகள், விரல்கள், முகம், கழுத்து எல்லாம் சேதமாவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். புத்திசாலித்தனமாக பொறுமையாக அந்த வேலையை செய்யும் தன்மை கிடையாது என்பது வருத்தமான விஷயம். சில விஷயங்களை சமையல் செய்யும்போது கவனித்து செய்தாலே போதும்: 1. காய் நறுக்கும்போது, அருவாமனையை தள்ளி வைங்க. கட்டர் பயன்படுத்துங்க. அப்படியே அருவாமனையைப் பயன்படுத்தினாலும், காய்கறிகளுடன் சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பெருவிரலில் சிறுசிறு கீறல்கள் விழாமல் நறுக்குங்க. நம்ம விரல் அழ