விடியலின் முன்னமே தூக்கம் கலைத்தது கனவொன்று மணக்கோலத்தில் உன்னை காட்டி... நீ இல்லாத திருமண நாளை நினைவுபடுத்தி... உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் உன் தோள் சாய்ந்து அமர்ந்திருந்த மாடிப்படிகள் குழந்தைகளை உன் மேல் சாய்த்து நீ அமரும் ஊஞ்சல் சட்டைமாட்டியில் உன் கட்டம் போட்ட சட்டை அதன் பையில் அமர்ந்திருக்கும் ஊதா நிற பேனா விஷ்ணு சக்கரமாய் உன் விரலையே சுற்றிக் கொண்டிருக்கும் வண்டி சாவி எல்லாம் என் கண் முன்னே உன்னை ஞாபகபடுத்திக் கொண்டு.... இவற்றுடன் நானும் இவ்வுலகில் ஒரு அஃறிணையாய்...