ஏதோ ஒன்றை ஒவ்வொருவரிடமும் தேடி அலைப்பாய்ந்து கொண்டிருக்கிறது இந்த மாய உலகம்... இச்சைகளையும் ஆசைகளையும் நட்பென்னும் புனிதத்தில் கரைத்து வாழ்க்கை நதியை பாவப்படுத்துகின்றது கட்டுப்பாடுகள் இல்லா இந்த மாயை காதலைக் களங்கத்தில் தள்ளி காவியம் புதிதாய் படைத்துக் கொண்டிருக்கிறது ஆயிரமாயிரம் மாதவிகளையும் கோவலன்களையும் அவதானிக்கச் செய்து கண்ணகிகளைக் காணாமல் செய்கிறது கற்பைக் கடைத்தெருவுக்கு இழுத்துச் சென்று சமாதானமாய் பேரம் பேசுகிறது கடைசியில் நல்லவன் என்ற போர்வையுடன் தெருவில் நடந்துப் போகச் செய்கிறது வேடிக்கைதான்.... கலாச்சார ஆணிவேரின் சாய்வு உறுதிச் செய்யப்பட்டுவிட்டது... முகமூடிகள் நிஜத்தைவிட இந்த நிழலில் அதிகம்... தூய்மையற்றக் காற்றைக் கூட சுவாசிக்கலாம் சாளரமற்ற அறையில் சாவை சுவாசிப்பதைவிட....