Skip to main content

Posts

Showing posts from February 22, 2015

சுயம்புகள், என்றும் சூத்திரதாரிகள்..

. சுயம்புகள், சூத்திரதாரிகள்.. காய் வெட்டி கட்டம் முன்னேறக் கூடியவை அன்பும் அமைதியும் ஓரிரு கட்டங்களுடனும் இரக்கமும் குற்றுணர்வும் இன்னும் சிலவற்றுடனும் முடியிறக்கப்பட்டு வெளியேறுகின்றன அடங்காமல், ஆசையின் நம்பிக்கை சுமந்து அரிதாரம் பூசாத சாமியாடியாய் ஆடித் தீர்க்கின்றன நித்தமும் வேம்புவின் வேதாளமாய் கை பரப்பி அவனுக்குள்ளும் இவளுக்குள்ளும் எவருக்குள்ளும் திமில் சுமந்து திரிகின்றன எங்கோ குரைக்கும் நாய்களுக்காய் இதயம் துறந்து ஓடி, மீண்டும் தஞ்சம் புகுகின்றன உடலுக்குள்.. சுயம்புகள்,  என்றும் சூத்திரதாரிகள்தான்..

ஜெய்வர்மம் அறக்கட்டளை விருது - Queen of Poets

விருது  கோவை ஜெய்வர்மம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கான விருதுகள் பிப்ரவரி 15, 2015 அன்று கோவை திவ்யோதையா அரங்கில் வழங்கப்பட்டன.  அந்த அறக்கட்டளையின் தலைவர் திரு டிராகன் ஜெய்ராஜ் அவர்களின் இரண்டு நூல்களும் அன்று வெளியிடப்பட்டன.  சரித்திர கதைகள் எழுதுவதில் வல்லவரான ஜெய்ராஜ் அவர்கள் வர்மக் கலை ஆசானும் கூட.  அவரின் வர்மக்கலையின் கர்ப்பிணி அடங்கல் என்னும் நூல், பெண்களுக்கானது. அதை நான் வெளியிட, திவ்ய சீலன் என்பவர் பெற்றுக் கொண்டார்.  கவிதைகளில் சிறப்பாய் செய்து வருவதால், எனக்கு Queen of Poets என்னும் விருது திரு பெ சிதம்பரநாதன், ஓம் சக்தி இதழின் பொறுப்பாசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது.  நூலைப் பற்றிய அறிமுகமும் பரிசுக்கான என் ஏற்புரையும் என் ஏற்புரை  என் இனிய மாலை வணக்கம். என்னை குறித்த நண்பர் ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்திற்கு நன்றி.   எனக்கு கிடைத்துள்ள இந்த விருதுக்காக ஜெய்வர்மம் அறக்கட்டளைக்கும் நண்பர் திரு டிராகன் ஜெய்ராஜ் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்த