Skip to main content

Posts

Showing posts from October 21, 2012

அட போங்கப்பா....

இடம் பொருள் என்கிற சுயம் இல்லாமல்  உணவு உடை என்கிற சிரத்தை இல்லாமல்  உறவுகளின் உரசல்கள் இல்லாமல்  எல்லாம் துறந்து  தனியாய் யாருமில்லா வானாந்தரத்தில்  மனதுக்கு மட்டும் நெருக்கமாய்  காற்றோடு சேர்ந்து காணாமல் போய்  லேசாகி தொலைய நினைப்புதான்... நினனவு கலைந்து  கண் திறந்தால்  கல்லும் மண்ணுமாய்  இந்த உலகம் கண்முன்னே  அட போங்கப்பா.....

பெண்கள் பலவிதம் 5

பெண்களும் தோழமையும்  இன்று காலையில் வேலையாய் வெளியே போய்விட்டு வரும்போது எனக்கு முன் திருமணமான இளவயது பெண்கள் இருவர்  நடந்து கொண்டிருந்தார்கள். இருவருமே சித்தாள் வேலை பார்ப்பவர்கள் என்பது அவர்கள் பேச்சிலே தெரிந்தது.  ஒருத்தி இன்னொருத்தியை தூக்கி விளையாடிக் கொண்டும் கிள்ளி விளையாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும் சென்று கொண்டிருந்தார்கள்.  இவங்க ரெண்டு பேரும்தான் அவங்க... 'என் புள்ளையை என் மாமியாரை நம்பி விட்டுட்டு வந்திருக்கேன். அந்த அம்மா புள்ளையை என்ன பாடுபடுத்துதோ தெரியல' - இது ஒருத்தி.... 'நானும்தான் விட்டுட்டு வந்துருக்கேன். என் புள்ளை என் மாமியாரை என்ன பாடுபடுத்துவானொன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். ' ன்னு இன்னொருத்தி.  இருவரின் சிரிப்பும் சந்தோஷமும் வழி முழுவதும்.  தோழமை  என்பது படிக்கும் பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மட்டும் வருவதில்லை. அக்கம்பக்கம் இருப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள் இப்படி எத்தனையோ வழிகளில் ஏற்படலாம்.  மூன்று நாட்களுக்கு முன் ஒரு திருமண வீட்டில் என் தோழிகளை (உடன் படித்தவ