Skip to main content

Posts

Showing posts from September 9, 2012

மனிதன் தான்...

 என் அடையாளம்... பராபரமென்றும் பார்த்தனேயென்றும் தூண் என்றும் துரும்பென்றும் சகலமும் நீயே என்றும் போற்றியும் தொழுதும் துதித்தும் அனுதினமும் பூஜை செய்தும் விரதம் இருந்தும் இந்த மானிட பிறவியில் நீ எதை எதையெல்லாம் பெற்றாயோ எதை எதையெல்லாம் இழந்தாயோ அதை அதையெல்லாம் நானும் பெற்றேன் இழந்தேன் என் கடவுள்கள் உன் கடவுள்கள் இல்லை என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள்  நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன் இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...

வதம் வேண்டி....

உன்னால் என் இதயம் கீறிய ஒரு வலி வடுவாய் வெளியே ரணமாய் உள்ளே... என் புன்னகையை பறித்து என் கண்ணீரை கனக்கச் செய்து என் உயிர் துடிப்பை அடக்கி வராமலே போவாயோ வராமலே போய்விட்டாயோ என்றெல்லாம் மனம் பேதலித்து மறைவதும் தோன்றுவதுமாய் எழுத்தில்லா காகிதமாய் என் மனதில் உன் முகம் என்னை வதை செய்கிறதே உன்னை வதம் செய்ய அவதாரம் வேண்டி நிற்கிறேன் உன்னிடமே....