பெண்பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகள் பதின் பருவத்தில் அதிகமாய் இருக்கும். அந்த கட்டத்தில்,அதாவது, பாவாடை சட்டை போட்ட வயதில், எங்களுக்கெல்லாம் அக்காமார்கள் கட்டும் தாவணியின் மீது ஒரு கண் இருக்கும். தாவணி கட்டத் தொடங்கியபிறகு, அடுத்ததாய் அம்மா கட்டியிருக்கும் சேலையின் மீது மோகம் ஸ்டார்ட் ஆகிரும். எண்பதுகளின் காலகட்டத்தில், நமது தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெரிய பூக்களுடன் பார்டர் வைத்த ஷிப்பான் மற்றும் ஜார்ஜட் புடவைகளின் மீதும் ஒற்றை ரோஜாவின் மீதும் அளவுக்கதிகமான காதல் இருந்தது. டிவியில் காட்டும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், கதாநாயகியை அந்த சேலையுடன் பார்த்தால், அம்மாவிடம் அப்ளிகேஷன் போடத் தொடங்குவோம். அவங்களுக்கு நாம சேலை கட்டனும்ன்னு சொன்னாலே கடுப்பாகி பத்ரகாளி ஆகிருவாங்க. ' முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ளே சேலையாம்...' ன்னு விரட்டிவிட்டுருவாங்க. நாம அம்மாவான பின்னாடிதானே அவங்க கஷ்டம் நமக்கு தெரியுது. அப்படி இப்படி போராடி ஒரு சேலை வாங்கினால், அதுக்கு இருக்கும் வாழ்வே தனி. பீரோவில், நமக்குன்னு ஒதுக்கிய அறையில் எல்லா துணிகளுக்கும் மேலே அத