டாக்டர்ஸ் ஒன்லி... நம்ம ஊருல இருக்கிற டாக்டர்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லணும். அவங்களை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு, மெத்த படித்தவர்கள்...MBBS, MD,MDDM,MCh, FRCS....இப்படி அடுக்கிகிட்டே போயிருப்பாங்க... இவங்க எல்லாம் நமக்கு பெரிய நோயா வந்தா மட்டுமே கவனமா பார்ப்பாங்க. சாதாரணமா முதுகு வலின்னு போனா அசால்ட்டா பார்த்துவிட்டுருவாங்க... பெரும்பாலும் இன்டெர்ஆக்டிவா இருக்க மாட்டாங்க... ரெண்டாவது, வெறும் MBBS மட்டும் படிச்சிருப்பாங்க...ஆனா, அவங்க specialize பண்ணாத துறையில் கூட நம்ம உடம்புக்கு தக்க மருந்து கொடுப்பாங்க. முடியலைனா, வேற டாக்டர் கிட்டே refer பண்ணுவாங்க...இவங்கள மாதிரிபட்ட டாக்டர்சை நாம துணிஞ்சு பாமிலி டாக்டரா வச்சிக்கலாம்... ஏன் இதெல்லாம் சொல்றேன்னு சந்தேகம் வரும் உங்களுக்கு...என் பிரச்னையும் பற்றி சொன்னாதான் உங்களுக்கு புரியும். ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு ஜெனரல் செக்அப்புக்காக ஒரு துறை சார்ந்த மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். வால் மாதிரி பட்டங்களை பின்னால் வைத்திருந்தார். நிறைய வருட அனுபவம் உள்ளவர் என்று என் தோழியின் recommendation ன