Skip to main content

Posts

Showing posts from March 11, 2012

போகும் போதும்...

வரும்போதும்....  நீயும் நானும் சங்கிலியும்  சாலை முழுவதுமாய் நடந்தோம்  கதை பேசிப்பேசி களைத்தோம்  சுற்றும் பார்த்து பார்த்து சலித்தோம்  நடந்து நடந்து பாதை தொலைத்தோம்  மீண்டும் நீயும் நானும் சங்கிலியும்  போகும்போது உன்னை நானும் வரும்போது என்னை நீயும்.... 

ரயில் பயணங்களில் 1....

ஜீன்ஸ் போட்ட அம்மா குழந்தைகளுடன் பயணம் செய்யும் நவ நாகரீக யுவதிகளை நாம் ரயில், பேருந்து மற்றும் விமான  பயணத்தின் போது பார்த்திருப்போம். நிறைய பெண்கள் தன உடை மற்றும் கைப்பையில் செலுத்தும் கவனத்தை கூட தன் குழந்தையின் மேல் காட்டுவதில்லை. பாவம் பிள்ளையை பெற்ற ஆண்கள். அந்த எட்டு மணி நேர பயணத்தின் போது எட்டு மணி நேரமும் குழந்தை அவர்களிடம்தான் இருக்கிறது.  ஒரு சமயம் என்னுடன் பயணித்த தம்பதிகளின் ஏழு மாத குழந்தை அழுதுக் கொண்டேயிருந்தது. அந்த பெண்ணுக்கு குழந்தையை தூக்கவும் தெரியவில்லை; அதை அணைத்து சமாதானப்படுத்தவும் தெரியவில்லை. அவள் கணவன்தான் வைத்திருந்தான். கேட்டால், 'அய்யய்யோ, எனக்கு குழந்தை எல்லாம் பார்த்துக்க தெரியாது.' என்று ஒரு படம் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவன் மட்டும் என்ன ஏற்கனவே பத்து பிள்ளைகளை வளர்த்தவனா என்ன... ஒரு முறை விமானத்தில் ஒரு பெண் விமானம் take off ஆகும்போது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், பணிப்பெண் குழந்தைக்கு பால் புகட்ட கூறிவிட்டு சென்றாள். உடனே அந்த பெண் தான் போட்டிருந்த டி- சர்ட்டை சட்டேன்று தூக்கியபோது ஒரு நிமிடம்  பதறி விட்டேன். கழுத்தை ச