Skip to main content

Posts

Showing posts from January 14, 2024

காதல்: The Core | Review | ஒரு பார்வை

காதல்: அதன் மூலம்  Kadhal: The Core  இயக்கம்: ஜியோ பேபி எழுதியவர்: ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியா நடிகர்கள்:    மம்முட்டி, ஜோதிகா  ஒளிப்பதிவு:     சாலு கே. தாமஸ் எடிட்டிங்: பிரான்சிஸ் லூயிஸ் இசை: மாத்யூஸ் புலிக்கன் தயாரிப்பு நிறுவனம்: மம்முட்டி கம்பனி காதல்: தி கோர்  பேசப்படாத பல விடயங்கள் இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்பாலினச்சேர்க்கை, திருநங்கைகள்/நம்பிகள் குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவதற்கு, திரைப்படமாக எடுப்பதற்கு, இன்னும் இங்கு சமூகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஏன் பேசவேண்டும், இருக்கிற சமூக சீர்கேடுகள் போதாதா, expose பண்ணுவதாலே தான் அதிகப்பட்டு போகிறது, இப்படி போனா இனி ஆணுக்கும் பெண்ணுக்குமான கல்யாணம், சந்ததி வளருதல் இல்லாமல் போய்விடாதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன..  சிலருக்கு பிடித்திருந்தும், எதுக்கு இதெல்லாம் என்கிறார்கள்; சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதனால் மொத்தமாக மறுக்கிறார்கள்; சிலர் ஏன் மலையாள படங்களில் அதிகமாக கிறித்துவ, இஸ்லாம் மதத்தினரை வைத்து எடுக்கிறார்கள் என்று மதத்தை முன்வைக்கிறார்கள்; சிலருக்கு, ஓரினச்சேர்க்கை க