குருவாயூர் என்றதும் கிருஷ்ணர் கோவிலும் அதன் பிரகாரம் சுற்றும் யானைகளும் நம் நினைவுக்கு வருவது வழக்கம். ஸ்ரீ கோவில் நடை சாத்தும் நேரம் விளக்கு ஏற்றி சாமியை யானை மீதேற்றி உலா வரும் நேரம் சீவெளி (Seeveli) ஆகும். கோவிலை சுற்றி மூன்று முறை நடைபெறும் இந்த சீவெளியின் சிறு ஒளிச்சித்திரம் இது : (http://www.youtube.com/watch?v=OJQKA-_KtAY) அன்று சாமி தரிசனம் முடித்து சீவெளி பார்க்க நின்றிருந்தேன். யானைகளின் அழகான தரிசனம், தன் மேல் அமர்பவர்களுக்கு கால் மற்றும் வால் சுருட்டி கொடுத்து தூக்கிவிடும் அதன் பழக்கம் எல்லாமே எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். கண்டிப்பாக ஆனக்கோட்டா (Anakkotta) செல்ல வேண்டும் என்கிற நினைவும் வந்தது. நான் ஒவ்வொரு முறை குருவாயூர் சென்று வரும் போதும் அங்கு சென்று யானைகளைப் பார்க்காமல் திரும்புவதில்லை. குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானைகள் புன்னதூர்கோட்டா வில் உள்ள குறுநில மன்னரின் அரண்மனை தோட்டத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடம் குருவாயூரிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. வாகனம் நிறுத்தும்