நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, தமிழ் என்பது என் அந்நிய மொழியாகி போனது. காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் - convent + English மேல இருந்த மோகம். இந்த சமயத்தில்தான் என் தாத்தா கண் அறுவை சிகிச்சைக்காக Madras இல் (பழைய சென்னை) இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். தாத்தா, என் அம்மாவின் அப்பா மட்டுமல்லாது என் அப்பாவின் தாய்மாமாவும் கூட. அவர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பு வீட்டின் முதல் பெண்ணான என் தலையின் மீது விழுந்தது. நான் ரொம்ப பொறுமைசாலி என்பது என் அம்மாவின் கணிப்பு (உண்மைதான், நம்புங்க...). இதற்காக நான் தியாகம் செய்த விஷயங்கள் நிறைய. என் dance class, hindi class எல்லாம் மூன்று வாரத்திற்கு cut ஆனது. என் வீட்டு எதிரில் தான் கலைவாணர் அரங்கம். அங்கு மேடை ஏறும் நாடகங்கள், children's film festival etc., etc., இதை எல்லாம் சில மாதங்களுக்கு துறக்க வேண்டி இருந்தது (அந்த வயசில் இதெல்லாம் பெரிய விஷயம்தான்). தாத்தா ஊரில் இல்லாததால் அங்கிருக்கும் வயல் வேலைக