ஆடை தேர்வுகள் குளிர் பிரதேசங்களில், வீடுகளுக்குள் ரேடியேட்டரின் புண்ணியத்தில் மிதமான வெப்பத்தில் இருக்கலாம்; முன் அல்லது பின் கதவைத் திறந்தால், சில நேரங்களில் வெளியே அடிக்கும் வெயில் இதமாய் இருக்கலாம்; சரி, நடக்கப்போவோம் என்று ஏமாந்தும் கூட மேலே Jacket இல்லாமல் போய்விட முடியாது. அடிக்கும் குளிர்ந்த காற்றின் வேகம் நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடக்கூடும். பிரித்தானியா மாதிரியான தொடுவானம் அருகில் இருக்கும் தீவுகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வீசும் காற்றின் வேகத்தை, அந்த நிலப்பரப்பில் இருக்கும் குன்றுகள், சிறு மலைகள், கடல் முகத்துவாரங்கள், வளைந்தோடும் ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் போன்றவை அதிகப்படுத்தி சமவெளிகளில் வீசும். அடுத்த காரணமாக, அதன் மேலிருக்கும் ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து வீசும் தூந்த்ரா அதிவேக குளிர் காற்றலைகள் (Polar Jet Streams), இந்த காற்றை அதிகமான குளிருக்குள் கொண்டு செல்கிறது. பிரித்தானியா தீவின் வடபகுதியில் இருக்கும் ஸ்காட்லாந்தில், காற்று அறுவடை பண்ணைகள் (Windfarms) அதிகம். அதுவே, அங்கு மின்சாரம் கொடுக்கும் மிக முக்கியமான அமைப்பாகும். அத