தினமும் நாம் கடந்து செல்லும் பாதைகளில், பேருந்து நிறுத்தங்களில், ரயில் நிலையங்களில், கோவிலின் முகப்பில், குப்பை தொட்டிகளில் எல்லாம் வயதானவர்கள், நோயில் அவதிப்பட்டு சுருண்டு கிடப்பவர்கள்,அரை நிர்வாணமாய் அல்லது முழு நிர்வாணமாய் கிடக்கும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஆதரவற்றோரின் பல முகங்களை நாம் பார்க்கிறோம் பார்த்தவாறே ஒரு பரிதாபப் பார்வையுடன் தாண்டிச் செல்கிறோம். எத்தனை மாதங்களாய் அவர்கள் அங்கு அந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நாம் யோசித்து கூட பார்ப்பதில்லை. கடந்து விடுகிறோம். கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் : கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு கோவை வலைப் பதிவர்களின் தோப்பு அமைப்பு சார்பாக நானும் சக வலைப் பதிவர்கள் கோவை சரளா மற்றும் இனியவை கூறல் கலாகுமரன் சென்றிருந்தோம். அந்த இல்லத்தில் சுமார் நூறு ஆதரவு இழந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். இனத்தாலும் மொழியாலும் அந்தஸ்தாலும் அறிவினாலும் வேறுபட்ட மனிதர்கள். அவர்களை பார்த்த போதுதான் தெரிந்தது நாம் கண்டும் காணாமல் கடந்து சென்றவர்கள் இவர்களை போன்றவர்