Skip to main content

Posts

Showing posts from June 26, 2016

பெண் இலக்கியவாதிகளின் நடைமுறை பிரச்சனைகள்..

இலக்கியங்களில் புழங்கி வரும் பெண்கள் அநேகம். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் அதிகமாய்  இருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதில். மிக குறைவாகவே இருக்கின்றன என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். சிறிய பிரச்சனையை முதலில் பார்ப்போம்.. ஞாயிறுகளில் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகளில் தான் பேசும் நிலை இருந்தால் மட்டுமே பெண்கள் கலந்துக் கொள்வதைப் பார்க்கிறேன். நானும் அவ்வாறே. வீட்டு சுமைகளைத் தாண்டி, அன்றைய பொழுது வெளிவர பெரிய ஆயத்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. நான் சமூகவெளியிலும் இயங்குவதால், வேறு வழியில்லாமல் எனக்கு அனுமதி கிடைத்துவிடுகிறது. ஒரு ஆண், ஞாயிறு அன்று வெளியே செல்கிறான் என்றால், கேட்பவருக்கெல்லாம் அவர் சகதர்மினி, 'அவரு கூட்டத்துக்கு போயிருக்காரு. அவருக்கு வேறு வேலையே இல்லை..' என்னும் பதில் கூறக்கூடும். அதை கேட்பவர்களும் 'இருக்கட்டும், விடுங்க.. என்று எளிதாய் எடுத்துக்கொள்ளக்கூடும். இதே நிலையில், ஒரு பெண் சென்றால், அடுத்த நாள் அவளை சந்திக்கும் ஒருவர், 'உங்க வீட்டுக்காரரை நேத்து சூப்பர் மார்கெட்டில் பார்த்தேன். நீங்க வீட்டுல இல்லைன