Skip to main content

Posts

Showing posts from June 17, 2012

தாவணியில்....

நீ அழகு... கண்ணுக்குள் கனவுகளை சுமந்து  மனதுக்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு கண்ணாடி பார்த்து சிரித்து உதட்டை ஈரப்படுத்தி தாவணி மடிப்பு சரிசெய்து ரோஜாவை தலையில் சொருகி புத்தகத்தை மார்போடு அணைத்து பார்க்கும் கண்களுக்கெல்லாம் பதில் சொல்லி உன் சிரிப்பை மட்டும் எனக்கு பரிசளித்து  தினம் தினம் நீ கல்லூரி செல்லும் அழகே தனி….  

சில விடியல்களின்...

சுகங்கள்... கதிரவனே நான்தான் என்னும் சில விடியல்கள் காப்பிகோப்பையுடன் பால்கனியில்  சில விடியல்கள் கனவுகளின் தாக்கத்துடன்  சில விடியல்கள் தூக்கம் சுகம் என்னும்  சில விடியல்கள் தூக்கம் கெட்டு தலைவலியுடன்  சில விடியல்கள் முன்றைய நாளின் முறைப்புகளுடன்  சில விடியல்கள் மனக் கசப்புகளுடன்  சில விடியல்கள் புரியாத உணர்வுகளுடன்  சில விடியல்கள்   புரியவைக்கும் முயற்சிகளுடன்  சில விடியல்கள் புன்சிரிப்பை எதிர்பார்த்து  சில விடியல்கள் விடியுமா என்ற கேள்விக்குறியுடன்  சில விடியல்கள் விடிந்தால்தான் உண்டு என்று  சில விடியல்கள் இன்று விடிந்தது எப்படி என்று இன்றே பார்போம்...

தகப்பன் சாமி....

தகப்பன்தான் சாமி..... காலையில் எழுந்ததும் மடங்கிய கை கால்களை நிமிர்த்த முடியாமல் வலி  சன்னலின் வழி எப்போதும் ஒரே சம்மணத்தில் இல்லத்தின் வாயிலில் பிள்ளையார் 'வாங்க காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்' என்று மனைவி மூர்த்தியின் காப்பியுடனும் ஹிந்து பேப்பருடனும் முன் வாசல் நாற்காலியில்... 'என் article பேபரில் வந்திருக்கு..., படிங்க....' என்று போகிற போக்கில் கோபாலய்யர் 'வாக்கிங் வரலையா?....' என்று பாஸ்கரன்  'மனசு சரியில்லை...'பொத்தம் பொதுவான என் பதில் 'மகன் நினைப்பா....' இது பத்மாவதி அம்மாள் இந்த கேள்விகளுக்கு பிறகுதான் உள்ளே அழுத்திய மகனின் நினைப்பு வெளி வந்தது 'இந்தியாவுக்கே திரும்புவதில்லை' என்ற மருமகளின் தீர்மானமும் நிழலாடியது  பசங்க அங்க பழகிட்டாங்க, படிப்பு இங்க சரியில்ல...என்ற மாதிரியான ஓட்டை காரணங்கள் 'ஏன் கிடைக்காதற்காக ஏங்குறீங்க?...இங்கே நம்மை மாதிரி எத்தனை பேர்....' மனைவியின் யோசனை  பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது இல்லை நாம்தான் பழமைவாதியாகவே  இருக்கிறோமோ...தெரியவில்லை... மீண்டும் மகனி