நினைப்பு : உன் நினைப்பு சுமக்கும் இதயம் வலிக்கிறதே சுமக்க முடியாமல்... சற்று இறக்கி வைக்கலாம்தான்... மீண்டும் சுமக்க தொடங்கினால் இன்னும் புதிதாய் பெரிதாய் வலிக்குமே... இறக்கிய இடத்திலேயே விட்டு செல்லலாம் என்றால் சற்று தொலைவு செல்வதற்குள் எங்கு தொலைத்தாலும் சரியாய் வீட்டு வாசலில் நிற்கும் பூனையாய் வந்து ஓட்டிக் கொள்கிறதே.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*** பார்வை.... பாதம் மட்டுமே பதித்து பார்வை பதிக்காமல் போயிருப்பாயோ என்கிற பரிதவிப்பில் என் பார்வை உன் மீதில்லை.... என் பரிதவிப்பு உண்மையென்றால் உன் பார்வை என் மீதில்லை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*** நிஜம்... தாமரை இலையின் மீதிருந்து விலகி ஓடும் நீரை போல் நினைவுகளிலிருந்து நிஜம் பிரித்து ஓடுகிறேன் ஆயினும் நிஜம் இன்னும் நரம்புகளில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***