Skip to main content

Posts

Showing posts from August 19, 2012

கட்டுமரம் மட்டும்...

கரையோடு.... ஒழுகல்கள் அடைக்கப்பட்டு  சீராக்கி  வலை திணிக்கப்பட்டு  மீனவர்களோடு  கடலுக்குள் கட்டுமரம்... ஆடும்  அலைகளில்  அதன் அசைவுகளில் ஆடி வீசும் காற்றில்  அதன் போக்கில் ஓடி நம்பியவர்களை பத்திரப்படுத்தி வலையுடன் மீன்களை சுமந்து காரிருள்  நெருங்கும் முன் கரை நோக்கி விரைந்து  மீன்கள் கடைத்தெருவுக்கும், மீனவன்  குடிலுக்கும் செல்ல, கட்டுமரம்  மட்டும் கரையில் அலைகளோடு உரசிக்கொண்டு.....

இது காதல்

வானை தொட்டு திரும்பினால் மட்டுமே நிலவை நம் வசப்படுத்தினால் மட்டுமே... உனக்குள் நான் தொலைந்தால் மட்டுமே உரசல்கள் மன்னிக்கபட்டால் மட்டுமே... மூடும் கண்களுக்குள் உறுத்தினால் மட்டுமே மனதுள் தேடி தவித்தால்  மட்டுமே... உயிரின் துடிப்பை உணர்ந்தால் மட்டுமே உருக்கும் இரவை மறந்தால் மட்டுமே... சாத்தியபடாததை சாத்தியபடுத்தினால் மட்டுமே சத்தியமாய் கனவில் வாழ்ந்தால் மட்டுமே... காதல்...... மொட்டுக்கள் உடைய காத்திருந்தாலோ... முடிச்சுகள் அவிழ  பார்த்திருந்தாலோ... மூச்சின் வெப்பம் உணர காத்திருந்தாலோ... மொத்தமாக கரைய காத்திருந்தாலோ... காதல் இல்லை....அக்மார்க் காமம் தான்...

பயணிக்க தயாராகிறது...

படகு.... பயணத்தின் தூரம் அதன் சுமை எதுவும் தெரியாது...  பயணம் நீரின் மேலா உள்ளா என்பதும் தெரியாது.... சந்தோஷமான முகங்களை ஏற்றிச் சென்று அப்படியே கரை   சேர்ப்போமா  சவமாய் சேர்ப்போமா அதுவும் தெரியாது.... கடலின் ஆழம் அதன் விலங்குகள் மோதும் பாறைகள் வீசும் புயல்கள் எல்லாம் பயமில்லாமல் தாண்டலாம்.... சுடும் மனிதர்களை மட்டும் பயமில்லாமல்  தாண்ட முடியுமா என்பதும் தெரியாது.... ஈரமான பயணம் தான் ஒவ்வொரு முறையும்  உப்பு நீரா சிவப்பு நீரா என்பது மட்டும் தெரியாது.... பயணிக்க தயாராகிறது படகு.....