Skip to main content

Posts

Showing posts from October 16, 2011

கோ - The Real King

கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை.   காரணம்   என்னவென்றால், ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை. ஏதாவது ஒரு profession கையில்  எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )  நிறைய  recommendations க்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன். இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு  லாவகமாக கையாண்டதற்கும்,  இதை இயக்கிய விதத்திற்காகவும்   டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்.... அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்.... its a hit. .. டைரக்டர் K V Anand நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார்.