மாற்று மெய்மை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் மதுரை வட்டார வழக்கில், புதுமையாய், யதார்த்தவியலில் ‘மாற்று மெய்மை’ என்னும் கோட்பாடுகளை முன்னிறுத்தி, தன் புதினங்களாலும் சிறுகதைகளாலும் தனித்துயர்ந்து நிற்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள். அவரின் படைப்புகள் குறித்தும் அதில் புழங்கும் கதை உத்திகள் குறித்துமான ஆய்வுகள் சமகால இலக்கிய உலகில் மிகவும் அவசியமான ஒன்றே யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் நாட்டார் வழக்கியலில் கதைசொல்லிகள் சொல்லும் கதைகள் தலைமுறைகள் கடந்தும் நம்முள் காலூன்றி நிற்கின்றன. ஓரிரு கதாபாத்திரங்களுடன் தொடங்கி, பல தலைமுறைகளை, கதைகளன்களை, பலவித தளங்களை, காலகட்டங்களைக் கடந்து புதிதாய் இணைப்பு கதைகளை வடிவமைத்து, முடிவுறாத கதைதன்மையுடன், நம் முன்னோர்கள் இட்டுக்கட்டிய கதைகள் சுவாரசியம் மிக்கவை. அதன்பிறகான இலக்கிய உலகில், அவ்வழக்கியலில் இருந்து கதை இலக்கியம் சற்று மாறி, உருமாறி, மையக்கருவாய் ஒன்றை நிலைப்படுத்தி, முடிவு நோக்கி நகரும் தன்மையுடையதாயும், வணிக நோக்கின் சாயம் பூசிக்கொண்டும் பயணிக்கத் தொடங்கியது. சில அழகியலை மட்டும் பிரமாதப்படுத்தியும் வெளிவந்த