யாதுமாகி எம் ஏ சுசீலா (கோவை இலக்கிய சந்திப்பில் 31.5.2015 யில் என்னால் மதிப்புரை செய்யப்பட்டது..) என்னுரை யாதுமாகி என்னும் இந்த நூலை எழுதியவர் எம் ஏ சுசீலா அவர்கள். வம்சி புக்ஸ் வெளியீடு. ஆசிரியர் : ஆசிரியர் எம் ஏ சுசீலா இந்த நாவலின் ஆசிரியர் சுசீலாம்மா அவர்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான எழுத்தாளர். கடந்த 36 வருடங்களாக மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றியவர். தமிழ் மீது அதிக பற்றுக் கொண்டவர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் ஆய்வுகள் என்று பல தளங்களில் இன்று வரை இயங்கிக் கொண்டிருப்பவர். நாவலின் சுருக்கம் : ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன்